டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீக்கெண்ட் லீவு கட். பாஜக எம்பிக்களுக்கு 2 நாள் கட்டாய பயிற்சி வகுப்பு.. மோடி பங்கேற்பு

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஆகஸ்டு 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பாஜக எம்.பி.க்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறும் என அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் பாஜக மீண்டும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது. கடந்த முறையைவிட இந்த முறை அதிக இடங்களில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் பாஜகவுக்கு 303 எம்பிக்கள் உள்ளனர்.

இவர்களில் ஏராளமான எம்பிக்கள் முதல் முறை எம்பிக்கள் ஆவார். தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. வரும் வார இறுதி நாள்களான வரும் ஆகஸ்ட் 3 (சனி) மற்றும் ஆகஸ்ட் 4 (ஞாயிற்றுகிழமை) ஆகியவை நாடாளுமன்றத்துக்கு விடுமுறை நாள்கள் ஆகும்.

பாஜக எம்பிக்களுக்கு

பாஜக எம்பிக்களுக்கு

இந்நிலையில் பாஜக எம்பிக்கள் யாரும் இந்த வார இறுதியில் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல முடியாது. ஏனெனில் டெல்லியில் வரும் ஆகஸ்ட் 3 மற்றும் 4ஆகிய தேதிகளில் பாஜக எம்பிக்களுக்கு பயற்சி வகுப்பு நடைபெறும் என கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

பயிற்சி அளிக்கிறார்கள்

பயிற்சி அளிக்கிறார்கள்

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக செயல்தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் தலைமையில் இந்த பயற்சி வகுப்பு எம்பிக்களுக்கு நடத்தப்பட உள்ளது.

அபியாஸ் வர்கா

அபியாஸ் வர்கா

அபியாஸ் வர்கா என்ற பெயரில் நடைபெற உள்ள இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து எம்பிக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

எம்பிக்களுக்கு பயிற்சி

எம்பிக்களுக்கு பயிற்சி

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியார், பாஜக எம்பிக்களுக்கு நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து எப்படி பேசுவது, எப்படி செயல்படுவது என்பது குறித்து விரிவாக பேசுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
BJP organise two-day training programme for all bjp MPs on August 3 and 4. PM Narendra Modi, Union Home Minister Amit Shah and BJP national working president Jagat Prakash Nadda, too, will attend The class.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X