டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு.. தேசிய தலைவர் அமித்ஷா, துணைத் தலைவர் ராஜ்நாத் சிங்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்களவை பாஜக குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய தலைவராக அமித் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவை பாஜக குழு துணைத் தலைவராக, ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநிலங்களவை பாஜக குழு தலைவராக தாவர் சந்த் கெலாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவையில் பாஜக குழு துணைத் தலைவராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

BJP Parliamentary Party Executive Committee list released.. PM Modi as the leader of the party

அதே போல அரசு கொறடாவாக பிரகலாத் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மக்களவை அரசு துணை கொறடாவாக அர்ஜுன் ராம் மேக்வால், மாநிலங்களவைக்கு அரசு துணை கொறடாவாக முரளிதரன் ஆகியோர் பாஜக சார்பாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 17வது மக்களவைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் ஆட்சியை தக்க வைத்தார் இந்நிலையில் வரும் 17ம் தேதி 17வது மக்களவை கூட்டத் தொடர் துவங்குகிறது,

ஜூன் 17-ம் தேதி துவங்கும் கூட்டத்தொடர் ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 2 நாட்களில் புதிய எம்பிக்கள் பதவியேற்கிறார்கள். ஜூன் 19-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடுராத்திரி.. காவிரி ஆற்றில்.. ஆளுங்கட்சியினர் அட்டூழியம்.. செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு நடுராத்திரி.. காவிரி ஆற்றில்.. ஆளுங்கட்சியினர் அட்டூழியம்.. செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

இந்நிலையில் மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.,யான, வீரேந்திர குமார் நேற்று தேர்வு செய்யப்பட்டார் இவரே மக்களவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார் மேலும் மக்களவைக்கு புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தலையும் நடத்துவார்

தொடர்ந்து நடைபெற உள்ள மக்களவை கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் வரும் ஜூலை 5ம் தேதி நடைபெற உள்ளது மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்

விரைவில் மக்களவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi is headed by the BJP parliamentary board. Accordingly, Modi has been elected as Lok Sabha BJP leader. Amit Shah has been elected as national president.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X