டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகா., ஹரியானா, ஜார்க்கண்ட் சட்டசபையைக் கலைத்து லோக்சபா தேர்லோடு நடத்த பாஜக திட்டம்?

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளை கலைதது விட்டு லோக்சபா தேர்தலோடு அங்கும் சட்டசபைத் தேர்தலை நடத்த பாஜக திட்டமிடுவதாக தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை பல்வேறு வகைகளில் வகுத்து வருகின்றன. அந்த வகையில் பாஜக இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவது என்பதில் அதிதீவிரமாக வேலை செய்து வருகிறது.

BJP plans to hold simultaneous poll to 3 state Assembly with LS election

இதற்காக பல்வேறு கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் பாஜக தலைமை இப்போது தங்கள் ஆட்சியில் உள்ள 3 மாநிலங்களின் சட்டப்பெரவைகளை கலைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விவசாயிகளுக்கு நிதியுதவி, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றில் தங்களுக்கு ஆதரவு பெருகி வருவதாக கருதும் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஓரளவுக்கு ஆதரவு இருக்கும் என்றே கருதுகிறது. மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் பாஜக ஆளும்கட்சியாக உள்ளது.

இந்த மாநிலங்களின் பதவிக்காலம் 2019-ம் ஆண்டு அக்டோபரில் முடிவடைகிறது. மற்றொரு மாநிலமான ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2019-ம் ஆண்டு டிசம்பரில் முடிவடைய உள்ளது. ஆகவே இந்த வருடத்தோடு பதவிக் காலம் முடிவடைய உள்ள சட்டப்பேரவைகளை கலைக்க பாஜக தீவிரமாக யோசித்து வருகிறது.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து மாநிலத் தேர்தல்களையும் நடத்தினால் தேர்தல் செலவு குறையும் என நிதி ஆயோக் கூறியிருந்தது. பிரதமர் மோடியும் இதை பலமுறை கூறியுள்ளார். தமிழகத்தில் கூட அதிமுக தரப்பில் ஒரு சிலர் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் எல்லையில் நிலவும் போர் பதற்றம், விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ள நிதியுதவி ஆகியவை தங்களுக்கு வாக்குகளாக மாறும் என பாஜக தலைவர் அமிட்ஷா உட்பட சீனியர் தலைவர்கள் அனைவருமே நம்புகின்றனர். கர்னாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஓப்பன் ஸ்டேட்மெண்டே விட்டிருந்தார். இந்த போர் தங்களுக்கு 22 தொகுதிகளை பெற்றுத் தரும் என்று. இதற்கு பல்வேறு இடங்களிலும் கண்டனங்கள் எழுந்தது வேறு கதை

வெறும் 2%.. என்னா ஆட்டம் காட்டுது தேமுதிக.. அப்படி என்னதான் வேணுமாம்.. கிடுகிடுக்கும் தேர்தல் களம்! வெறும் 2%.. என்னா ஆட்டம் காட்டுது தேமுதிக.. அப்படி என்னதான் வேணுமாம்.. கிடுகிடுக்கும் தேர்தல் களம்!

மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கலைப்பது குறித்து பேசிய பாஜகவினர் இதற்கு முன் கடந்த வருட இறுதியில் நடைபெறவிருந்த தேர்தலை மனதில் வைத்து தெலுங்கான சட்டப்பேரவையை சந்திர சேகரராவ் கலைத்துவிட்டு பெருவெற்றியை பெற்று இப்போது ஆட்சியில் உள்ளதை சுட்டிக் காட்டுகிறார்கள். தெலுங்கானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டுவரை இருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் தாக்கம் தங்கள் மாநிலத்திலும் இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த சந்திர சேகரராவ் சட்டபேரவையை முன்கூட்டியே கலைத்து விட்டு தேர்தலை சந்தித்து இப்போது ஆட்சியில் உள்ளார்.

அதுபோல இப்போது சூழல் தங்களுக்கு ஓரளவுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் மகாராஷ்டிரா, ஹரியாணா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் சேர்த்தே தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சியின் தலைவர் அமிட்ஷா சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மாநிலங்களும் ஒத்துக்கொள்ளும் சூழலில் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து இந்த மூன்று மாநிலங்களும் சட்டப்பேரவைக்கான தேர்தலையும் சந்திக்கும் .

English summary
Sources say that BJP is planning to hold simultaneous poll to 3 state Assembly with LS election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X