டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷா அளவுக்கு யாரும் வியூகம் வகுக்க முடியாது தீதி.. பிரசாந்த் கிஷோர் இன்னும் வளரவேயில்லை- பாஜக

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தலில் வியூகம் வகுப்பதில் அமித்ஷா கல்லூரியின் முதல்வர் என்றால் பிரசாந்த் கிஷோரோ ஒரு மாணவர் என பாஜகவின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா கருத்து தெரிவித்திருந்தார்.

ஆந்திர சட்டசபை தேர்தலில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் பிரசாந்த் கிஷோர்தான் வியூகம் வகுத்தார். இதில் இவரது பிரச்சார வியூகத்தின் அடிப்படையில் செயல்பட்ட ஜெகன்மோகன் ரெட்டி அபார வெற்றி பெற்று இன்று முதல்வராகியுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு மட்டும் அல்ல, நரேந்திர மோடி, நிதிஷ்குமார் ஆகியோர் முதல்வராகவும், கடந்த 2014-இல் லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கவும் இவரது வியூகம் உதவியது.

கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேச அதிமுகவினருக்கு தடை.. ஈபிஎஸ்- ஓபிஎஸ் அதிரடி! கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேச அதிமுகவினருக்கு தடை.. ஈபிஎஸ்- ஓபிஎஸ் அதிரடி!

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான ஆலோசகராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். வரும் 2021-இல் மேற்கு வங்கம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது.

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பலத்த அடி வாங்கியது. இதையடுத்து சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பேரிடி கொடுக்க இப்போதோ மம்தா வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டார்.

அமித்ஷா

அமித்ஷா

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா சனிக்கிழமை கூறுகையில் பிரசாந்த் கிஷோர் ஒன்றும் அமித்ஷாவை விட பெரிய தேர்தல் நிபுணர் அல்ல. தேர்தல் வியூகம் வகுப்பதில் அமித்ஷா கல்லூரி முதல்வர் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டார்.

விஜயவர்கியா

விஜயவர்கியா

ஆனால் கிஷோரோ இன்னும் கல்லூரி மாணவராகவே உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா மீது அம்மாநில மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். எவ்வளவு பெரிய தேர்தல் நிபுணர்கள் வந்தாலும் அவரை காப்பாற்ற முடியாது என விஜயவர்கியா கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
BJP National Secretary Kailash Vijayvargiya says that Prashant Kishore is not a bigger strategist than AmitShah. The former is still college Student, whereas later is a College Principal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X