டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு வருடத்தில் டாடா அறக்கட்டளையிடம் இருந்து ரூ. 356 கோடி நன்கொடை பெற்ற பாஜக

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2018-19ம் நிதிஆண்டில் டாடா அறக்கட்டளையிடம் இருந்து ரூ.356 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

2018-19ம் நிதிஆண்டில் ஒட்டுமொத்தமாக 700 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ20,000க்கும் அதிமாக பெற்ற நன்கொடை எவ்வளவு என்ற விவரத்தை வெளியிட வேண்டியது அவசியம்.

லோக்சபா தேர்தல்.. உலக கோப்பை போட்டியை மிஞ்சிய அஜித் புகழ்.. டிவிட்டரில் வருடம் முழுக்க ஒரே கிங்!லோக்சபா தேர்தல்.. உலக கோப்பை போட்டியை மிஞ்சிய அஜித் புகழ்.. டிவிட்டரில் வருடம் முழுக்க ஒரே கிங்!

கடசிகள் தகவல்

கடசிகள் தகவல்

இதன்படி ரூ20,000க்கும் அதிகமாக தனி நபரிடம் இருந்தோ அல்லது அமைப்பிடம் இருந்தோ பெற்ற நன்கொடை விவரங்களை அனைத்து கட்சிகளுமே தேர்தல் ஆணையத்தில் தெரிவித்து வருகின்றன.

பாஜக நன்கொடை

பாஜக நன்கொடை

அந்த வகையில் கடந்த 2018-19ம் நிதியாண்டில் பாஜக பெற்ற நன்கொடை விவரத்தை கடந்த மாதம் 31ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

 டாடா கொடுத்த ரூ356 கோடி

டாடா கொடுத்த ரூ356 கோடி

கடந்த 2018-19ம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ700 கோடி அளவுக்கு காசோலைகள் மற்றும் ஆன்லைன் மூலம் நன்கொடைகள் வந்துள்ளது. இதில், டாடா அறக்கட்டளை மட்டுமே ரூ356 கோடி நன்கொடை பாஜகவுக்கு கொடுத்துள்ளது.

ரூ54.25 கோடி நன்கொடை

ரூ54.25 கோடி நன்கொடை

இது தவிர பாரதி ஏர்டெல் குழுமம், ஹீரோ மோட்டார்ஸ், ஓரியன்ட் சிமென்ட், டிஎல்எப் மற்றும் ஜேகே டயர்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய புரூடன்ட் அறக்கட்டளை ரூ54.25 கோடியை அளித்துள்ளன. இதனிடையே தனிநபர்கள், நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடையின் மதிப்பை இந்த அறிக்கையில் பாஜக தெரிவிக்கவில்லை.

English summary
The BJP received Rs 356 crore in donations from an electoral trust controlled by the Tata Group during 2018-19. As per information provided by the BJP to the EC on October 31, it received a total of over Rs 700 crore in donations during the financial year 2018-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X