ம.பியில் மீண்டும் பாஜக ஆட்சி.. ரிபப்ளிக் ஜன் கி பாத் எக்சிட் போல்
Recommended Video
ம.பி.யில் 4வது முறையாக பாஜக வெற்றி பெரும் ! - கருத்து கணிப்பில் தகவல்
டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவே வெல்லும் என்று ரிபப்ளிக் ஜன் கி பாத் எக்சிட் போல் தெரிவித்துள்ளது.
ஜன் கி பாத் மற்றும் ரிபப்ளிக் இணைந்து நடத்திய எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் இன்று வெளியிடப்பட்டன. அதன் முடிவுகள் விவரம்:
பாஜகவுக்கு 110 முதல் 126 இடம் வரை கிடைக்கலாம். பாஜக தற்போது இங்கு ஆட்சியில் உள்ளது. எனவே ம.பியில் பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது.
காங்கிரஸுக்கு 95 முதல் 115 வரை கிடைக்கும். மத்தியப் பிரதேசத்தில் இழந்த ஆட்சியைப் பிடிக்க இயலாத நிலையில் காங்கிரஸ் தொடர்கிறது.
மற்றவர்களுக்கு 6 முதல் 22 இடங்கள் வரை கிடைக்கும் என்று ரிபப்ளிக் ஜன் கி பாத் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
Comments
எக்சிட் போல் exit polls madhya pradesh bhopal bjp congress madhya pradesh assembly election 2018 மத்தியப் பிரதேசம் போபால் பாஜக காங்கிரஸ்
English summary
Republic Jan Ki Baat has predicted that BJP to regain power in MP.