டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.. எந்த தொகுதியில் மோடி போட்டி?

Google Oneindia Tamil News

டெல்லி: ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களிலுள்ள 91 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தொகுதிகளுக்கான, பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

லோக்சபா தேர்தலில், நாடு முழுக்க, மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19ஆம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ள நிலையில், மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BJP to release its first list of candidates for the Lok Sabha polls today

இந்த நிலையில், பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு முதல் கட்டமாக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களிலுள்ள 91 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

அந்த தொகுதிகளுக்கான, பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும், அது தொடர்பான அறிவிப்பு இன்றைய வேட்பாளர் பட்டியலில் இடம் பெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிப்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
The BJP is likely to release its first list of candidates for the Lok Sabha polls today, when its central election committee is scheduled to meet. The list will have the names of most of the candidates for the first phase of polling, which will be held on April 11 in 91 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X