டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. வாரணாசியில் மீண்டும் மோடி.. காந்திநகரில் அமித்ஷா

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Candidates List: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ

    டெல்லி: 182 லோக்சபா தொகுதிகளுக்கான பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

    லோக்சபா தேர்தலுக்கான 146 தொகுதிகளுக்கு, காங்கிரஸ் கட்சி, வேட்பாளர்களை அறிவித்து விட்டது. ஆனால், ஆளும் பாஜக இதுவரை, வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்து வந்தது.

    BJP releases first list of candidates for Lok Sabha Elections 2019

    பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்றுடன் மொத்தம் மூன்று முறை கூடி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கு ஆய்வு நடத்தி இருந்தது. இந்தச் சூழ்நிலையில், இன்று இரவு 7 மணியளவில் பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

    2 மினி பேருந்துகள் போதும்... கமல் கட்சி பற்றி ராஜேந்திர பாலாஜி கிண்டல்2 மினி பேருந்துகள் போதும்... கமல் கட்சி பற்றி ராஜேந்திர பாலாஜி கிண்டல்

    இந்த பட்டியலில் 182 வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. கடந்த லோக்சபா தேர்தலை போலவே, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் மீண்டும் நரேந்திர மோடி போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர், நிதின் கட்கரி நாக்பூரில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்குகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் ராகுலை எதிர்த்து இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் ஸ்மிருதி இரானி.

    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குஜராத்தின் காந்திநகர் தொகுதி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ தொகுதிகளில் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்து.

    வி.கே.சிங், காசியாபாத் தொகுதியிலும், ஹேமமாலினி மதுரா தொகுதியிலும், சாக்ஷி மகராஜ் உன்னாவ் தொகுதியிலும் களம் காண்கிறார்கள்.ரேபரேலி - சந்தோஷ்குமார் கங்குவார்

    அருணாச்சல் கிழக்கு - கிரண் ரிஜிஜூ

    ஸ்ரீநகர் - கலீத் ஜஹாங்கிர்

    ஜம்முகாஷ்மீர் - ஜூகல் கிஷோர்

    உதம்பூர் - ஜிதேந்திர சிங்

    அனந்த்நாக் - சோஃபி யூசப்

    கோவை - சி.பி ராதாகிருஷ்ணன்

    தூத்துக்குடி - தமிழிசை சௌந்தராஜன்

    கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்

    ராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன்

    சிவகங்கை - எச்.ராஜா

    English summary
    BJP's first list of candidates for LokSabha Elections 2019 expected at 7pm, says sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X