டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக சொத்து மதிப்பு 22 சதவீதம் அதிகரித்து ரூ.1,483.35 கோடியானது .. ஆய்வறிக்கையில் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக-வின் சொத்துகள் கடந்த நிதியாண்டில் 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் அளித்துள்ள தகவல்களை ஆய்வு செய்து ஏடிஆர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

BJPs assets increased 22 per cent to Rs 1,483.35 crore.. Information on the study report

இந்த ஆய்வறிக்கையின் படி இந்த 7 கட்சிகளின்அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சொத்துக்கள் 2016-17 நிதியாண்டில் ரூ.3456.65 கோடியிலிருந்து ஆறு சதவீதம் அதிகரித்து, 2017-18 நிதியாண்டில் ரூ.3,260.81 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் 1213.13 கோடி ரூபாயாக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் சொத்துகள், 2018-ம் ஆண்டில் 22 சதவீதம் அதிகரித்து 1,483.35 கோடி ரூபாயாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் ஓராண்டில் 15.26 சதவீதம் குறைந்துள்ளது. இதன்படி 2017-ம் ஆண்டில் 854.75 கோடி ரூபாயாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் 2018-ம் ஆண்டில் 724.35 கோடி ரூபாயாக குறைந்துள்ளது/

சொத்துகளின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது பகுஜன் சமாஜ். 2017-ம் நிதியாண்டில் இக்கட்சியின் சொத்துகள் 680.63 கோடியாக இருந்தது. 2018-ம் நிதியாண்டில் 716.72 கோடி ரூபாயாக உயர்ந்து 5.30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் 16.39 சதவீதம் குறைந்து, ரூ.11.41 கோடியிலிருந்து ரூ.9.54 கோடியாக குறைந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மொத்த சொத்துக்கள் 10.86 சதவீதம் உயர்ந்து ரூ .26.25 கோடியிலிருந்து 29.10 கோடியாக அதிகரித்துள்ளது.

திரிணாமுலின் மொத்த சொத்துக்கள் 10.86 சதவீதம் அதிகரித்து ரூ .26.25 கோடியிலிருந்து, 29.10 கோடியாக அதிகரித்துள்ளது. சிபிஐ கட்சியின் சொத்துகள் ரூ.10.88 கோடியிலிருந்து 5.60 சதவீதம் அதிகரித்து 11.49 கோடியாக உயர்ந்துள்ளது.

சிபிஎம் கட்சியின் சொத்து மதிப்பு 463.76 கோடி ரூபாயிலிருந்து, 3.95 சதவீதம் அதிகரித்து 482.1 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The BJP's assets have increased by 22 per cent in the last financial year, according to a report released by the ADR, the organization for democratic reform.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X