டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த மாதிரியான சம்பவங்களுக்கு என்கவுண்டர்களை சட்டப்பூர்வமாக்கணும்.. பாஜக பெண் எம்பி வரவேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    என்கவுண்டர் நடந்த பாலத்திலிருந்து போலீசை மலர் தூவி வரவேற்ற மக்கள்.. மாஸ்! - வீடியோ

    டெல்லி: பெண் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற தெலுங்கானா போலீசாரை, பாஜக பெண் எம்பி லாக்கெட் சாட்டர்ஜி பாராட்டியுள்ளார்.

    ஹைதராபாத்தில் பெண்ணை கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும், மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு போலீசார் இன்று அதிகாலை அழைத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு அவர்கள் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து ஒருவர் பின் ஒருவராக நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

    அதிகாலை சென்றது ஏன்? விலங்கு போட்டீர்களா? என்கவுண்டர் பற்றி நிருபர்கள் சரமாரி கேள்வி.. கமிஷனர் பதில்அதிகாலை சென்றது ஏன்? விலங்கு போட்டீர்களா? என்கவுண்டர் பற்றி நிருபர்கள் சரமாரி கேள்வி.. கமிஷனர் பதில்

    மக்கள் வரவேற்பு

    மக்கள் வரவேற்பு

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்து பெண்களை கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு எண்கவுண்ட்டர் தான் சரியான தீர்வு என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.தெலுங்கானா போலீசார் இந்த எண்கவுண்டர் மூலம் ஒரே நாளில் நாட்டின் ஒட்டுமொத்த மக்களிடமும் பாராட்டு பெற்றுள்ளனர்.

    ஆத்மா சாந்தி

    ஆத்மா சாந்தி

    இந்நிலையில் பாஜக பெண் எம்பி லாக்கெட் சாட்டர்ஜி, பாலியல் பலாத்காரம் செய்து பெண்ணை கொன்ற குற்றவாளிகளை எண்கவுண்ட்டர் தெலுங்கானா போலீசாரை வெகுவாக பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இது நம் நாட்டிற்காக எடுக்கப்பட்ட ஒரு நல்ல நடவடிக்கையாகும். காலையில் இந்த செய்தியைப் படித்தபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    எண்கவுண்ட்டர்கள்

    எண்கவுண்ட்டர்கள்

    பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் ஆத்மா இப்போது நிம்மதி அடைந்திருக்கும். அவளுடைய குடும்பம் நிம்மதி அடைந்திருக்கும் இதுபோன்ற எண்கவுண்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும்.

    போலீசுக்கு நன்றி

    போலீசுக்கு நன்றி

    இதுபோன்ற (பாலியல் கொலைகள்) ஏதாவது நடந்தால், ஏழு முதல் பதினைந்து நாட்களுக்குள் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் அல்லது ஒரு என்கவுண்டரில் கொல்ல வேண்டும். இன்று நடந்த என்கவுண்டருக்காக ஹைதராபாத் போலீசாருக்கு நன்றி கூறுகிறேன்" என்றார்.

    English summary
    BJP's Locket Chatterjee on Telangana encounters: "If something of this sort happens then the culprits should be hanged to death or killed in an encounter within seven to fifteen days. I thank Hyderabad police for the encounter carried today,"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X