டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஸ்வரூப வேட்டை... அதிமுகவை தொடர்ந்து திமுக எம்.பி.க்களுக்கும் பாஜக குறி?

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவை தொடர்ந்து திமுக எம்.பி.க்களுக்கும் பாஜக குறி? - வீடியோ

    டெல்லி: தெலுங்குதேசம், காங்கிரஸ், அதிமுகவை தொடர்ந்து திமுக எம்.பிக்களுக்கும் பாஜக குறிவைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஒரே தேசம் ஒரே கட்சி என்கிற அஜெண்டாவை செயல்படுத்துவதில் பாஜக படுதீவிரமாக இருந்து வருகிறது. ராஜ்யசபாவில் பெரும்பான்மையை பெறுவதற்காக தெலுங்குதேசம் எம்.பிக்களை முதலில் வளைத்தது பாஜக.

    அதனை தொடர்ந்து அதிமுகவின் 7 எம்.பிக்களும் விரைவில் கூண்டோடு பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுகவையும் கலகலக்க வைக்க பாஜக மேலிடம் தீவிர முனைப்பு காட்ட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    திமுக சமாதானம்

    திமுக சமாதானம்

    லோக்சபா தேர்தலுக்கு முன்பே மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் எந்த குடைச்சலும் கொடுக்காமல் ஆதரவு தருவோம் என திமுகவின் டெல்லி முகம் வாக்குறுதி அளித்தது. அதை லோக்சபா தேர்தலுக்குப் பின்னரும் உறுதி செய்தது.

    பாஜக விரும்பவில்லை

    பாஜக விரும்பவில்லை

    இந்நிலையில் லோக்சபாவில் பாஜகவுக்கு எதிராக திமுகவின் குரல்கள் தத்துவார்த்தம் சார்ந்ததாக வீரியமாக ஒலிக்கத் தொடங்கியது. இதை பாஜக மேலிடம் ரசிக்கவில்லை.

    சர்ச்சைக்குரிய சந்திப்பு

    சர்ச்சைக்குரிய சந்திப்பு

    இதனால் தமது கோபத்தையும் அதிருப்தியையும் திமுக தரப்புக்கு தெரிவித்தது பாஜக. இந்நிலையில் முக்கியமான வழக்குகளில் சிக்கிய திமுகவின் எம்.பி ஒருவர் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

    திமுகவையும் சிதைக்கும் பாஜக?

    திமுகவையும் சிதைக்கும் பாஜக?

    இச்சந்திப்பு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமைக்கு தெரிந்துதான் மத்திய அமைச்சரை அந்த எம்.பி. சந்தித்தாரா? அல்லது தம் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்கவே இந்த சந்திப்பு நடந்ததா? என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அதிமுகவை தொடர்ந்து திமுகவையும் சிதைக்க பாஜக மேலிடம் களமிறங்கிவிட்டதா? என்கிற கேள்வியையும் இச்சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    DMK Senior MP met Top BJP leaders created new controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X