டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாய கடன் தள்ளுபடி, நீட் விலக்கு குறித்து கப்சிப்.. அதிமுக, பாமகவின் கோரிக்கைகளை தூக்கி போட்ட பாஜக

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் அறிக்கையில் அதிமுகவின் கோரிக்கையை கண்டுகொள்ளாத பாஜக- வீடியோ

    டெல்லி: விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து பாஜக வாய்த் திறக்கவே இல்லை. இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் என்று வந்தாலே அதில் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன். இதில் எந்த கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பொறுத்தும் மக்கள் வாக்களிப்பதுண்டு.

    அந்த வகையில் முதல் முதலாக கோரிக்கை என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாமகதான். அக்கட்சியின் 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தது. அதில் நீட் தேர்வுக்கு விலக்கு, விவசாய கடன் தள்ளுபடி, மதுவிலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் முன் வைக்கப்பட்டன.

    பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக கொண்டு வரப்படும்.. பாஜக அதிரடி அறிவிப்பு! பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக கொண்டு வரப்படும்.. பாஜக அதிரடி அறிவிப்பு!

    காங்கிரஸ் கட்சி

    காங்கிரஸ் கட்சி

    இதைத் தொடர்ந்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. அதில் நீட் தேர்வுக்கு விலக்கு, விவசாய கடன்கள் தள்ளுபடி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அது போல் காங்கிரஸ் கட்சியும் நீட் தேர்வு விவகாரத்தில் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்தன.

    விவசாயிகள் போராட்டம்

    விவசாயிகள் போராட்டம்

    இன்று பாஜகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் விவசாயக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வுக்கு விலக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம்தான் அளித்தது. விவசாயிகள் தங்கள் கடனை தள்ளுபடி செய்யக் கோரி அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    பாஜக கூட்டணியில்

    பாஜக கூட்டணியில்

    இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் பட்டை நாமத்தை போட்டுவிட்டது. அது போல் இந்த இரு கோரிக்கைகளை முன்வைத்த கட்சிகளான அதிமுகவும், பாமகவும் பாஜகவுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

    கூடுதல் நிதி கிடைக்கும்

    கூடுதல் நிதி கிடைக்கும்

    அப்படியிருக்கையில் அந்த இரு கட்சிகளின் கோரிக்கைகளையும் பாஜக காற்றில் பறக்கவிட்டு விட்டது. இதில் எங்கிருந்து மாநில உரிமைகளை இவை இரு கட்சிகளும் பாஜகவிடம் இருந்து பெறுவது? பாஜகவுடன் கூட்டணியால் தமிழகத்துக்கு கூடுதல் நிதி கிடைக்கும் என முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

    விவசாயிகள்

    விவசாயிகள்

    திமுகவின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இருந்தது. ஆனால் பாஜகவோ கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமகவின் கோரிக்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டது. யானை பசிக்கு சோளப்பொறி என்ற வகையில் விவசாயிகள் குறித்த அறிவிப்புகள் உள்ளதாகவே விவசாயிகள் கருதுகின்றனர்.

    English summary
    BJP bypassed ADMK and PMK's manifesto regarding farmers loan waive off and Neet exemption.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X