டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2024 லோக்சபா தேர்தல்... தமிழகம் உட்பட தென்னிந்தியாவுக்கு குறி.. இலக்கு 333 தொகுதிகள்!

Google Oneindia Tamil News

டெல்லி: 2024 லோக்சபா தேர்தலில் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்களில் அமோக வெற்றியை அறுவடை செய்வதுடன் தனித்தே 333 தொகுதிகளைக் கைப்பற்றுவதை வியூகமாக வகுத்துள்ளதாம் பாஜக.

வட இந்தியாவில் பாஜகவுக்கு மாற்று என எந்த கட்சியுமே நம்பிக்கையை தரவில்லை. காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தள் ஆகியவை மக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை. இஸ்லாமியர்கள்தான் இவர்களின் வாக்கு வங்கிகளாக உள்ளனர்.

ரஜினி கிண்டும் அரசியல் உப்புமா.. வீட்டு வாசலை தாண்டாத ரஜினி கிண்டும் அரசியல் உப்புமா.. வீட்டு வாசலை தாண்டாத "சூப்பர் அரசியல்".. பின்னணியில் பலே திட்டங்கள்

இந்துக்கள் வாக்குகள்

இந்துக்கள் வாக்குகள்

உயர்ஜாதியினர் , இதர பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடிகள் என ஒட்டுமொத்தமாக இந்துக்கள் பாஜகவின் பின்னால் அணிதிரண்டு இருப்பதைத்தான் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. ஆனால் தென்னிந்தியாவில் நிலைமை வேறானது.

காங். கபளீகரம்?

காங். கபளீகரம்?

கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸ் இருதுருவ அரசியலுக்குள் நுழைந்து அறுவடை செய்ய தொடர்ந்து முயற்சிக்கிறது பாஜக. ஆனால் வெல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது அக்கட்சி. அனேகமாக அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர்களை வளைத்துப் போட்டு பாஜக கால் பதிக்க படுதீவிரமாக முயற்சிக்கலாம்.

ரஜினிகாந்த் வருகிறார்

ரஜினிகாந்த் வருகிறார்

தமிழகத்தில் திராவிட இயக்க சிந்தனை கூர்மை அடைந்துள்ளது. இந்து யார்? இந்துத்துவாவாதிகள் யார்? என்பதில் அடிப்படைப் புரிதல் இருக்கிறது. இதனால் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியை ஒட்டுமொத்தமாக தமிழகம் நிராகரித்தது. இருப்பினும் தமிழகத்தில் ரஜினிகாந்த் போன்றோரை களமிறக்கி அறுவடை செய்யலாம் என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது.

தென்னக வியூகம்

தென்னக வியூகம்

இதேபோல் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானாவில் டி.ஆர். எஸ். கட்சிகள் உதவியுடன் கணிசமான தொகுதிகளை அள்ளலாம் என்பதும் பாஜகவின் கால்குலேஷன். அத்துடன் கிழக்கு கடலோர மாநிலங்களான ஒடிஷா, மேற்கு வங்கத்தையும் ஒரு கை பார்த்துவிடலாம் என இப்போதே கட்சித் தாவல்கள், பிரமுகர்கள் கபளீகரம் என தொடங்கிவிட்டது பாஜக. தென்னிந்தியாவை குறிவைத்து மொத்தமாக வரும் லோக்சபா தேர்தலில் தனித்து 333 தொகுதிகளைக் கைப்பற்றுவது என்பது திட்டமாம்.

English summary
BJP Will Focus on Southern States in next Loksabha Elections 2024.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X