டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நமக்கும் ஒரு டிவி.. அது தான் நமோ டிவி.. உற்சாகத்தில் பாஜக!

Google Oneindia Tamil News

டெல்லி: நமோ டிவி என்ற பெயரில் மோடியின் நிகழ்சிகளை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனராம்.

தேர்தலில் வாக்குகளை கவர நமோ டிவி தொடங்குகிறார் பிரதமர் மோடி. தேர்தல் நெருங்க நெருங்க கட்சிகள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பாஜக மோடியின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நேரடியாக மக்களுக்கு தெரிவிக்க நமோ என்ற பெயரில் டிவி தொடங்குகிறது. இதற்கு முன்னர் 2012 ம் ஆண்டு குஜராத் தேர்தலின்போது மோடி நமோ டிவியை கொண்டு வர முயற்சித்தார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போதும் மோடி வந்தே குஜராத் என்ற பெயரில் ஒரு டிவி தொடங்க முற்பட்டபோது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனையடுத்து தேர்தல் ஆணையம் அதனை தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

BJP to launch Namo TV

இந்த நிலையில் இந்த மக்களவைத் தேர்தலையொட்டி ஒரு புதிய டிவி சேனல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் மோடி கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளும் இதில் ஒளிபரப்பாகும். மோடியின் ஊர்வலங்கள், தேர்தல் பிரச்சார நிகழ்வுகள் இது தவிர மோடியின் உரைகள், அவர் கலந்து கொள்ளும் பிற நிகழ்வுகள் என அனைத்துமே இந்த டிவியில் ஒளிபரப்பபடவுள்ளது. இந்த டிவிக்கு மோடியின் படம்தான் லோகோவாகவும் வைக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு உட்பட்டே இதில் விளம்பரங்கள் ஒலிபரப்பப்படும் என பாஜகவினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் கூறிய பாஜகவினர் டிவி தவிர நமோ என்ற அதிகாரப்பூர்வ ஆப்பும் மோடி வைத்துள்ளார். இந்த ஆப் மூலமாக மக்களுக்கு அவரது நடவடிக்கைகள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகிறது. என்று கூறினார்

இதுகுறித்து டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள பாஜக வண்ணமயமான தேர்தலை காணுங்கள் மக்களாட்சியின் குதூகலத்தை கண்டு மகிழுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது

"என்னங்க பாமக சின்னம் ஆப்பிள்ங்கிறாரு.." .. அட அவர் தப்பாச் சொல்றாருங்க.. பாமக சின்னம் தேங்காய்!!

இந்த டிவி குறித்தும் தனது நிகழ்சிகளை கண்டுகளிக்குமாறு டிவிட்டர் மூலம் நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் மேலும் கூறியுள்ள அவர், "#MainBhiChowkidar campaign இன்று மாலை நடக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சவுகிதார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அவர்களின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள உள்ளார்கள். இதை நீங்கள் நமோ டிவியில் கண்டு ரசிக்கலாம் என்றும் மோடி டிவீட் செய்துள்ளார்

2014 தேர்தலில் சமூக வலைதளங்கள் மூலம் வளர்ச்சி நாயகன் என்று கட்டியமைக்கப் பட்ட பிம்பம் மூலம் ஆட்சியை பிடித்த மோடி இப்போது டிவி மூலம் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

English summary
BJP is all set to launch Namo TV to show PM Modi's speeches.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X