டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அத்வானிக்கும்.. முரளி மனோகர் ஜோஷிக்குமா இந்த நிலை.. விதிவிலக்கு தர வழியில்லையா..?

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக மூத்த தலைவர்களான அத்வானியும், முரளிமனோகர் ஜோஷியும் டெல்லியில் உள்ள அரசு குடியிருப்பை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் புதிய வீடு தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜகவை கட்டமைத்ததில் லால் கிஷன் அத்வானிக்கும், முரளி மனோகர் ஜோஷிக்கும் மிக முக்கியமான பங்கு உண்டு. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகளை பற்றி மக்கள் அறிந்திராத காலத்தில் தீயாய் உழைத்து பாஜகவை மூலை முடுக்குகளுக்கு எல்லாம் கொண்டு சேர்த்தவர் எல்.கே. அத்வானி. முரளி மனோகர் ஜோஷியை பொறுத்தவரை பனாரஸ் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குகே பேராசியராக இருந்து வகுப்பு எடுத்தவர்.

bjp veterans l.k.advani and murali manohar joshi lose their official bungalows

இப்படி பல்வேறு சிறப்புகளுக்குரிய பாஜக மூத்த தலைவர்களான இவர்கள் இருவரும் டெல்லியில் அரசு குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதோர் பதவிக்காலம் முடிந்து 3 மாதங்களில் அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு காலி செய்யாமல் வசிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அரசு விதி உள்ளது.

அத்வானியும், முரளிமனோகர் ஜோஷியும் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. குஜராத்தின் காந்திநகர் மக்களவை தொகுதியை அமித்ஷாவுக்கு விட்டுகொடுத்தார் அத்வானி. அதேபோல், கடந்த முறை வெற்றிபெற்ற உ.பி.யின் கான்பூர் தொகுதியில் போட்டியிட இந்த முறை ஜோஷி விரும்பவில்லை.

பொதுமக்களிடம் கெடுபிடி வேண்டாம்...போக்குவரத்து அதிகாரிகளுக்கு பினராயி அறிவுறுத்தல்பொதுமக்களிடம் கெடுபிடி வேண்டாம்...போக்குவரத்து அதிகாரிகளுக்கு பினராயி அறிவுறுத்தல்

அத்வானி 30, பிரிதிவ்ராஜ் சாலை, டெல்லி என்ற முகவரியில் அத்வானியும், ஜோஷி 6, ரைசினா சாலை, டெல்லி என்ற முகவரியில் முரளி மனோகர் ஜோஷியும் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு இடங்களுமே உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளவை.

அத்வானி, ஜோஷி ஆகியோரின் வயதையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அவர்கள் இருவருக்கும் விதிவிலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளன.

English summary
bjp veterans l.k.advani and murali manohar joshi lose their official bungalows
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X