டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக.. 18 தொகுதிகளை வெல்லும்- இந்தியா டுடே எக்சிட் போல்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக அதிகபட்சம் 18 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே ஆக்சிஸ் போல், எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

46 சதவீதம் வாக்குகளை பாஜக பெறும், 43 சதவீதம் வாக்குகளை காங்கிரஸ் பெறும். 10 முதல் 12 தொகுதிகளை காங்கிரஸ் வெல்ல கூடும் என்கிறது இந்த கருத்துக்கணிப்பு.

BJP will win 18 seats in Madhya Pradesh by election: India today exit polls

பாஜகவை பொறுத்தளவில் 16 முதல் 18 தொகுதிகள் வெல்லமுடியும். பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்த அளவில் அதிக பட்சம் ஒரு தொகுதியை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. 6 சதவீதம் வாக்குகளை அந்த கட்சி பெறக்கூடும்.

மற்ற கட்சிகள் 5 சதவீத வாக்குகளை பெறக்கூடும் என்ற போதிலும் ஒரு தொகுதியிலும் அவர்கள் வெல்லமுடியாது என்று கூறுகிறது இந்த கருத்துக்கணிப்பு.

பீகாரில் ஆட்சி யாருக்கு? சற்று நேரத்தில் வெளியாகிறது எக்சிட் போல் முடிவுகள்பீகாரில் ஆட்சி யாருக்கு? சற்று நேரத்தில் வெளியாகிறது எக்சிட் போல் முடிவுகள்

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கான கருத்துக் கணிப்புகள் ஒரு பக்கம் வெளியாகி வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 25 போ் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனா். 3 எம்எல்ஏக்கள் மரணமடைந்தனா். இதனால் 28 தொகுதிகள் காலியானது. இவற்றில் 10 தொகுதியில் வென்றாலும் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP may win 18 seats and will get 46 percentage of vote share in Madhya Pradesh bypolls, India Today Axis exit poll results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X