டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

11 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் 9-ல் பாஜக வெற்றி- அதிகரித்தது பாஜக கூட்டணி பலம்!

Google Oneindia Tamil News

டெல்லி: 11 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் 9-ல் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.க்கள் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் 10 எம்.பிக்கள் , உத்தரகாண்ட் 1 எம்.பி ஆகியோரது பதவிக் காலம் நவம்பர் 25-ல் முடிவடைகிறது. இதையடுத்து இந்த 11 இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.

BJP wins 9 of 11 Rajya Sabha seats

இதில் 9 இடங்களில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

இதனையடுத்து ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 92 ஆக உள்ளது. 245 எம்.பிக்களைக் கொண்ட ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு மொத்தம் 123 எம்.பிக்கள் தேவை. ராஜ்யசபாவில் கட்சிகளின் தற்போதை பலம்:

  • பாஜக- 92; கூட்டணி கட்சிகள்; 18
  • காங்கிரஸ்- 38; திரிணாமுல் காங். 13
  • அதிமுக- 9; பிஜூ ஜனதா தளம்- 9
  • இதர கட்சிகள்; 63

வரலாற்றில் முதல் முறையாக ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சியின் பலம் 40-க்கும் கீழே குறைந்து 38 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP winning nine of the 11 Rajya Sabha seats on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X