டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி கலவரம்.. வலதுசாரிகள் எழுதிய புத்தகம் திடீர் ரிலீஸ்.. எதிர்ப்பால் திரும்ப பெற்ற வெளியீட்டாளர்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி கலவரம் தொடர்பான புத்தகத்தை அதன் எழுத்தாளர்கள் முன்கூட்டியே வெளியிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த புத்தகத்தை திரும்பப் பெறுவதாக பிரபல பதிப்பகம் ப்ளூம்ஸ்பரி அறிவித்துள்ளது.

Recommended Video

    மோடியின் Boeing 777 | Boeing 747 | Air India One

    மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடியவர்கள் மீது குடியுரிமை சட்ட ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

    Bloomsbury India withdraws publication of Delhi Riots 2020: The Untold Story book

    அப்போது இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த கலவரத்தின் போது இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சுமார் 50 பேர் இந்த கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த கலவரம் தொடர்பாக, Delhi Riots 2020: The Untold Story என்ற பெயரில், வழக்கறிஞர் மோனிகா அரோரா, சோனாலி சிதல்கர் மற்றும் பிரேர்னா மல்ஹோத்ரா புத்தகம் எழுதினர்.

    இந்த புத்தகம் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென இன்று மாலை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக புத்தகத்தின் எழுத்தாளர்கள் மற்றும் பாஜக முக்கிய தலைவர் கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

    Bloomsbury India withdraws publication of Delhi Riots 2020: The Untold Story book

    கபில் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த புத்தகம் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் நடைபெற்றது இந்துக்களுக்கு எதிரான கலவரம் என்றும், இந்தியா மற்றும் உலகம் இந்த புத்தகத்தை வாசித்து அந்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். வெறுப்பு பிரச்சாரம் மூலம், உண்மை வெளிவருவதை தடுக்க முடியாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருந்தார்.

    ஐஏஎஸ் தேர்வில் வென்ற பூரண சுந்தரிக்கு பார்வை குறைபாடு.. உதவிக் கரம் நீட்டிய எம்எல்ஏ டாக்டர்.சரவணன்ஐஏஎஸ் தேர்வில் வென்ற பூரண சுந்தரிக்கு பார்வை குறைபாடு.. உதவிக் கரம் நீட்டிய எம்எல்ஏ டாக்டர்.சரவணன்

    இதையடுத்து, இணையதளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. டெல்லி கலவரத்துக்கு சிறுபான்மையினரை குற்றம்சாட்டும் வகையிலான ஒரு புத்தகத்தை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் வெறுப்பு அரசியலுக்கு புகழ்பெற்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர் என்று தெரிவித்துள்ளார் இந்த சமூக செயல்பாட்டாளர்.

    Bloomsbury India withdraws publication of Delhi Riots 2020: The Untold Story book

    இதுபோல பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த நிலையில், ப்ளூம்ஸ்பரி பதிப்பகம், ஒரு அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. அதில், Delhi Riots 2020: The Untold Story புத்தகத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டோம். விசாரணை மற்றும் நேர்காணல்கள் போன்றவற்றின் மூலமாக எழுத்தாளர்கள் கண்டறிந்த தகவல்களை இந்த புத்தகத்தில் எழுதி உள்ளனர். ஆனால், பதிப்பகத்துக்கு தெரியாமல் எழுத்தாளர்கள் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். இதற்கு பதிப்பகம் அனுமதி வழங்கவில்லை. எனவே இந்த புத்தகத்தின் வெளியீட்டை நாங்கள் திரும்பப் பெறுகிறோம்.

    பேச்சுரிமைக்கு 'ப்ளூம்ஸ்பரி இந்தியா' ஆதரவளிக்கும் என்ற போதிலும், சமூகத்தின் மீதான பொறுப்புணர்வை மதிக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Bloomsbury India has withdrawn publication of their new book, Delhi Riots 2020: The Untold Story as the publishing house has faced criticism.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X