டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வானத்தில் நீல நிலா... இந்தியாவில் எந்த நேரத்தில் பார்க்கலாம் தெரியுமா

இன்றைய தினம் ஹாலோவீன் இரவில் நீல நிலவு செவ்வாய் கிரகத்தின் அருகே தோன்றும்.

Google Oneindia Tamil News

டெல்லி: இன்றைய தினம் வானத்தில் நீல நிலவினை பார்க்கலாம். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வரும் முழு நிலவு நீல நிலவு அதாவது ப்ளூ மூன் எனப்படுகிறது. ஹாலோவீன் இரவில் நீல நிலவு செவ்வாய் கிரகத்தின் அருகே தோன்றும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இன்றைய தினம் இந்திய நேரப்படி இரவு 8.19 மணிக்கு ப்ளூ மூன் எனப்படும் நீல நிற நிலவை வானத்தில் பார்க்கலாம்.

ப்ளூ மூன் என்பது ஒரு அரிதான விஷயமாகும். அதுவும் இந்த ஆண்டு இதன் வினோதம் இன்னும் அதிகமாகி விட்டது. 2020 ஆம் ஆண்டு ஏற்கனவே அனைவரின் வாழ்விலும் ஒரு மறக்கமுடியாத ஆண்டாக மாறி வருகிறது. ப்ளூ மூனுக்கும் அது விதிவிலக்கல்ல.

மாதத்தில் ஒரு முறை மட்டுமே பௌர்ணமி வரும் அரிதாக ஒரு மாதத்தில் 2 பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை ப்ளூ மூன் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள். 29 நாட்களுக்கு ஒரு முறை வரும் பௌர்ணமி மாதத்தின் 30 அல்லது 31 நாட்கள் இருப்பதால் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் 2 பௌர்ணமிகளாக வருகிறது.

நீல நிலா

நீல நிலா

ப்ளூ மூன் என்று பெயர் இருந்தாலும் நிறத்தில் எந்த பெரிய மாறுபாடும் இருக்காது. பௌர்ணமி கால நேரத்தை மட்டுமே இது குறிக்கிறது. ஹாலோவீன் என்பது மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். சாத்தான்களை விரட்டும் நாளாகவும், வெயில் காலம் முடிந்து குளிர் காலத்தின் துவக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது.

ஹாலோவீன் ப்ளூ மூன்

ஹாலோவீன் ப்ளூ மூன்

இந்த ஆண்டு ஹாலோவீனுடன் ப்ளூ மூன் இணைந்து வருகிறது. இந்த ஆண்டு ஹாலோவீன் இரவில் வானத்தில் ஒரு நீல நிலவு காணப்படும். இந்த நாளில் காணப்படும் நிலவை நீல நிலவு என நாம் அழைத்தாலும், உண்மையில் நிலவு நீலமாகக் காணப்படுவதில்லை. இயற்கை பேரழிவுகளால் வளிமண்டலத்தில் வீசப்படும் துகள்கள் காரணமாக நிலவு மிகவும் அரிதாகவே நீல நிறமாகத் தெரிகிறது என்று நாசா கூறுகிறது.

இரவில் நீல நிலா

இரவில் நீல நிலா

ஹாலோவீன் இரவில் நீல நிலவு செவ்வாய் கிரகத்தின் அருகே தோன்றும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், வானம் தெளிவாகவும், மாசு அளவு குறைவாகவும் இருந்தால் இந்திய நேரப்படி இரவு 8.19 மணிக்கு வானத்தில் பார்க்கலாம்.

மீண்டும் எப்போது பார்க்கலாம்

மீண்டும் எப்போது பார்க்கலாம்

வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பல பகுதிகளில் ப்ளூ மூன் தெரியுமாம். இந்த ஆண்டு இதை காண தவறவிட்டால் அத்துடன் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதியும், 2026 ஆம் ஆண்டு மே மாதம் 31ம் தேதியும், 2028 டிசம்பர் 31ம் தேதியும் இது மீண்டும் தோன்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Blue Moon will be visible in the night sky and this rare phenomenon or Halloween Moon will be visible to the entire world instead of just a few parts. It will be visible in India on October 31 at 8.19 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X