டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பாய்ஸ்" பட வசனத்தை விட மோசம்.. அதிரவைத்த "பாய்ஸ் லாக்கர் ரூம்" ஆபாசம்.. 12ம் வகுப்பு "அட்மின்" கைது

பாய்ஸ் லாக்கர் ரூம் வழக்கில் பள்ளி மாணவன் அதிரடி கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்கூல் பாய்ஸ் பேசற பேச்சா அது.. அவ்வளவும் ஆபாசம், அசிங்கம்.. இதற்கெல்லாம் காரணம்"பாய்ஸ் லாக்கர் ரூம்" என்ற இன்ஸ்டாகிராம் குரூப்தான்.. மாணவியை எப்படி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யலாம் என்பது வரை இந்த இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக கூடி பேசியுள்ளனர் மாணவர்கள்.. இது தொடர்பாக 'பாய்ஸ் லாக்கர் ரூம்'ன் குரூப் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்!!

Recommended Video

    BoyslockerRoom: வன்புணர்வு செய்வது எப்படி? இன்ஸ்டாகிராம் குரூப்பில் பேசிய சிறுவர்கள்

    தெற்கு டெல்லியில் உள்ள பிரபல பள்ளி அது.. அங்கு படிக்கும் 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து "பாய்ஸ் லாக்கர் ரூம்" (Bois Locker Room) என்ற இன்ஸ்டாகிராம் குரூப் ஒன்றை உருவாக்கினர். இந்த குரூபில் சில பள்ளி மாணவர்களும் இணைந்தனர்.

    இவர்களின் வேலையே, குரூப்பில் தங்களுடன் பயிலும் சக மாணவிகளை பற்றி அசிங்கமான கமெண்ட்களை ஷேர் செய்வதுதான்.. மாணவிகளின் போட்டோக்களுடன் ஆபாசமான பதிவை இணைத்து ஷேர் செய்வார்கள்.. ஒருகட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது பற்றின சமாச்சாரங்களையும் இதில் பதிவிட ஆரம்பித்தனர்.

    கமெண்ட்கள்

    கமெண்ட்கள்

    வெறும் ஆபாச கமெண்ட்கள், ஆபாச போட்டோக்கள் என்று ஆரம்பித்து கூட்டு பாலியல் வரை பரபரப்பாக பதிவுகள் போடவும், ஏகப்பட்ட மாணவர்களும் இதில் இணைந்தனர்.. குரூப்-சேட்டிங் நடந்தது.. ஆனால் இவர்களின் உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்கள் திடீரென சோஷியல் மீடியாவில் வெளியாகிவிட்டது.. இது எப்படி, யாரால் என்று தெரியவில்லை.

    எதிர்ப்புகள்

    எதிர்ப்புகள்

    ஸ்கூல் படிக்கிற பிள்ளைகள் இப்படி சோஷியல் மீடியாவில் இவ்வளவு தரக்குறைவாக, அசிங்கமாக உரையாடி கொண்டிருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.. ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பின.. படிக்கிற வயசில் செய்ற வேலையா இது என்று கண்டித்தனர். இதையொட்டி #BoysLockerRoom என்ற பெயரில் ஹேஸ்டேக்குகளும் வெளியாகின.

    மகளிர் ஆணையம்

    மகளிர் ஆணையம்

    பெண் பிள்ளைகளை இப்படித்தான் மதிப்பதா? வீட்டில் யாரும் இதை பற்றி சொல்லி தருவது இல்லையா? படிக்க வர்றீங்களா? எதுக்கு வர்றீங்க என்ற கேள்விகளை பொதுமக்கள் கேட்டபடியே உள்ளனர். விஷயம் பெரிதானது.. டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.. அடுத்து டெல்லி சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. இந்த குரூப்பில் உள்ள உறுப்பினர்கள் யார்யார், அட்மின் யார், ஐபி அட்ரஸ் போன்றவை குறித்து விசாரணைகள் நடந்தன.

    21 மாணவர்கள்

    21 மாணவர்கள்

    இந்நிலையில் பாய்ஸ் லாக்கர் ரூம் குரூப்பில் உள்ள 5 மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.. அந்த மாணவர்களின் பெற்றோர் முன்னிலையிலேயே இந்த விசாரணை நடந்தது.. மேலும் 21 மாணவர்களுக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.. இப்போது இந்த இன்ஸ்டாகிராம் குரூப்பின் அட்மின் 12-ம் வகுப்பு மாணவனாம்... வயசு 18தான் ஆகிறது.. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கைது

    கைது

    இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இன்னொரு பக்கென்ற விஷயம் வெளிவந்துள்ளது.. இவர்களை போலவே Girls Locker Room என்ற குரூப் உள்ளதாம்.. அதில், மாணவர்களை பற்றி பலவிதமான கருத்துகள் பகிரப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இதன் பின்னணி என்ன என்பது இனிமேல் தெரியவரும். இப்படி படிக்கிற பசங்க ஆளுக்கு ஒரு குரூப்பை உருவாக்கி ஆபாச கருத்துக்களை பதிவிட்டு வருவது வேதனையாக உள்ளது... இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ?!

    English summary
    bois locker room case issue and 18 year old student arrest in new delhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X