டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா கொடுமை.. தியேட்டர்கள் திறக்கவில்லை.. 270 ஊழியர்களை பணி நீக்கம் செய்த புக் மை ஷோ

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க 270 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக புக் மை ஷோ தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை பெரும்பாலானவை நிதி நெருக்கடியில் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் அளவுக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை சில நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகின்றன.

அந்த வகையில் ஊபர், ஓலா, கார்தேக்கோ உள்ளிட்ட நிறுவனங்களும் சில ஐடி நிறுவனங்களும் ஆட் குறைப்பை செய்துள்ளன. பல நிறுவனங்கள் ஆட்குறைப்போடு ஊதிய குறைப்பையும் செய்து வருகிறது.

மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து.. கலெக்டர்கள் யோசனை.. மருத்துவ குழுவுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து.. கலெக்டர்கள் யோசனை.. மருத்துவ குழுவுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை

செய்தி

செய்தி

இந்த நிலையில் புக் மை ஷோ எனும் ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும் நிறுவனத்தில் 1450 ஊழியர்களில் 270 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ஹேம்ரஜனி மின்னஞ்சல் மூலம் ஊழியர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்.

விடுமுறை

விடுமுறை

அதில் இன்று நாம் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறோம். அதனால் துரதிருஷ்டவசமாக ஆட்குறைப்பை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அவர்களுக்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மருத்துவ காப்பீடு, பணிக்கொடை உள்ளிட்ட பயன்கள் கிடைக்கும். அது போல் விடுமுறையில் அனுப்பப்பட்டவர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவர்.

நடவடிக்கைகள்

நடவடிக்கைகள்

இதுதவிர ஊழியர்களுக்கான மற்ற செலவுகள் குறைக்கப்படும். வென்டார்களுடன் மீண்டும் பேரம் பேசப்படும். பணத்தை மிச்சப்படுத்த தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது போல் ஒவ்வொரு நிறுவனங்களாக ஆட்குறைப்பை செய்து வருகிறது.

வேலையில்லா திண்டாட்டம்

வேலையில்லா திண்டாட்டம்

ஏற்கெனவே நாட்டில் வேலையின்மை பிரச்சினை தலைதூக்கி வருகிறது. இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் நிதிநெருக்கடியால் தனியார் நிறுவனங்கள் இது போன்ற ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருவதால் வேலையில்லாதோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

English summary
Book My Show, a online ticket booking has to be laid off 270 employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X