டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2020ம் ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு விருந்தினராக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பங்கேற்கிறார்.

பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவது மற்றும் உலகின் ஐந்து முக்கிய பொருளாதார நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவதன் ஒரு அம்சமாக பிரேசிலில் நடைபெற்ற 11 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நேற்று, போல்சனாரோவை சந்தித்தார்.

Brazil Prez Bolsonaro to be chief guest at Indias Republic Day celebrations in 2020

போல்சனாரோவுடனான சந்திப்பின் போது, ​​பிரதமர் மோடி, அவருக்கு இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக வருகை தர வேண்டும் என்ற அழைப்பை முன் வைத்தார்.

மோடி அழைப்பை ஏற்று, 2020 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, போல்சனாரோ மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

"பிரதமர் மோடி 2020 குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, போல்சனாரோவை அழைத்தார். பிரேசில் அதிபர் இந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்" என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Brazilian President Jair Bolsonaro has accepted Prime Minister Narendra Modi's invitation to be the chief guest at India's Republic Day celebrations in 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X