டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு; பிரேசிலில் ஒரே நாளில் 1,286 பேர் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1286 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா என பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் முழு வீச்சில் போடப்பட்டன. ஆனாலும் கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாததாக உள்ளது.

Brazil reports 1,286 more COVID-19 deaths

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,43,71,173 ஆக உள்ளது. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 41,67,908., உலகம் முழுவதும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 17,64,49,192.

தற்போதைய நிலையில் அமெரிக்காவில் கொரோனா மீண்டும் கோரத்தாண்டவமாடி வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 68,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 332 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில் 45,460 பேருக்கு நேற்று மட்டும் கொரோனா தொற்று உறுதியானது. அதேநேரத்தில் பிரேசிலில் 1286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் நேற்று மட்டும் 36,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

ரஷ்யாவில் நேற்று 23,811 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது; ஆனால் ஒரே நாளில் 795 பேர் கொரோனால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் 39,498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது; மேலும் 541 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர்.

English summary
Brazil has registered 1286 Coronavirus deaths on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X