டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரேசிலில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு- ஒரே நாளில் 1,14,139 பேருக்கு பாதிப்பு; 2,343 பேர் மரணம்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரேசிலில் ஒருநாள் கொரோனா பாதிப்பு திடீரென 1,14,139 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பிரேசிலில் ஒரே நாளில் 2,343 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா 2-வது அலையால் உலகில் இந்தியாதான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்டா பிளஸ் என்ற புதிய வகை கொரோனா இந்தியாவில் கொரோனா 3-வது அலைக்கு காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Brazil reports highest-ever single day rise with 1,14,139 cases

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,03,42,376 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 39,06,638 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,50,67,606 பேர் மீண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 6,596 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பும் குறைகிறது.. சென்னையில் தொடர் சரிவு! தமிழ்நாட்டில் இன்று 6,596 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பும் குறைகிறது.. சென்னையில் தொடர் சரிவு!

பிரேசிலில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,14,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2,343 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 54,319 ஆகவும் மரணங்கள் எண்ணிக்கை 978 ஆகவும் இருக்கிறது. கொலம்பியாவில் ஒருநாள் பாதிப்பு 29,995, அர்ஜென்டினாவில் 27,319 ஆகவும் ஒருநாள் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

English summary
Brazil registered a single-day record of 1,14,139 new confirmed coronavirus cases in the past 24 hours,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X