டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Breaking News Live: ரபேல் கொள்முதல் குறித்து விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ரபேல் போர் விமானத்தின் தரம், தேவை, வாங்கிய நடைமுறையில் சந்தேகம் ஏதும் இல்லை. இது மத்திய அரசின் கொள்கை முடிவும் கூட. எனவே இதில் தலையிட முடியாது என்று கூறி சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

Breaking News Live: Rafale deal in SC Live updates

Newest First Oldest First
1:43 PM, 14 Dec

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித் ஷா
1:43 PM, 14 Dec

நாட்டின் காவலனை திருடன் என்று கூறினார்கள்.. இன்று உண்மை வெளியாகி விட்டது - அமித் ஷா

ஊழலை வரலாறாக கொண்டவர்கள் எங்களை ஊழல்வாதிகள் என்று கூறுவது நகைப்புக்குரியது - அமித் ஷா

1:42 PM, 14 Dec

சூரியனை நோக்கி சேற்றை வாரி இறைத்தால் அது உங்கள் மீதுதான் வந்து விழும் - அமித் ஷா
1:42 PM, 14 Dec

பொய்களை வைத்து புகார் கூறியவர்கள் முகத்தில் அறைந்துள்ளது சுப்ரீம் கோர்ட் - அமித் ஷா
1:42 PM, 14 Dec

அரசின் மீதும், பிரதமர் மீதும் சிறுபிள்ளைத்தனமான புகார்களைக் கூறியது காங்கிரஸ் - அமித் ஷா

காங்கிரஸ் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித் ஷா

1:42 PM, 14 Dec

வாய்மையே வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது - அமித் ஷா

ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு தவறு செய்யவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது - அமித் ஷா

1:41 PM, 14 Dec

ரபேல் ஒப்பந்தம் குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பாஜக வரவேற்பு

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்பதாக அமித் ஷா பேட்டி

10:49 AM, 14 Dec

ரபேல் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த காரணம் இல்லை - சுப்ரீம் கோர்ட் கருத்து
10:45 AM, 14 Dec

சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது - சுப்ரீம் கோர்ட்

முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்

10:42 AM, 14 Dec

சில சந்தேகம் காரணமாகவே இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டது - தலைமை நீதிபதி அமர்வு
10:42 AM, 14 Dec

விமானம் வாங்கியது தொடர்பான நடைமுறையில் சந்தேகம் இல்லை - சுப்ரீம் கோர்ட்
10:41 AM, 14 Dec

விமான ஒப்பந்தம் தொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
10:41 AM, 14 Dec

ரபேல் போர் விமானத்தின் தரம், விலை குறித்து சந்தேகம் இல்லை - சுப்ரீம் கோர்ட்
10:40 AM, 14 Dec

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை தேவையில்லை - சுப்ரீ்ம் கோர்ட்
10:40 AM, 14 Dec

ரபேல் வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வாசிப்பு

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு தீர்ப்பளிக்கிறது

10:37 AM, 14 Dec

ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக ராகுல் காந்தி புகார்

ஊழல் நடக்கவில்லை என்று மத்திய அரசு மறுத்து வருகிறது

இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுமா என்று நாடு முழுவதும் பரபரப்பு

10:37 AM, 14 Dec

ரபேல் பேர விவகாரம் குறித்து விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுமா

ரபேல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் சற்று நேரத்தில் தீர்ப்பு

English summary
SC will decide on the probe plea for Rafale deal issue Today, here are the live Updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X