டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Breaking News Live: ப.சிதம்பரத்திற்கு 5 நாள் கஸ்டடி.. சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிபிஐ தரப்பில் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். இவர் நேற்று சிபிஐ மூலம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இன்று மதியம் இரண்டு மணிக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

Newest First Oldest First
6:56 PM, 22 Aug

சிபிஐ காவலில் உள்ள சிதம்பரத்தை தினமும் 30 நிமிடங்கள் சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி
6:40 PM, 22 Aug

ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு. ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க முடியாது: சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
5:34 PM, 22 Aug

ப. சிதம்பரம் வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு. ப. சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை.
5:05 PM, 22 Aug

ப. சிதம்பரம் வழக்கில் 1.30 மணி நேர வாதம் நிறைவடைந்தது. 30 நிமிடம் கழித்து உத்தரவு வழங்கப்படும் - நீதிபதி அஜய் குமார்.
5:03 PM, 22 Aug

ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? : அரை மணி நேரத்தில் உத்தரவு
5:02 PM, 22 Aug

சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் பேசுகிறார்
4:57 PM, 22 Aug

ப. சிதம்பரம் சாதாரண மனிதர் இல்லை என்று சிபிஐ வாதம் செய்தது.
4:51 PM, 22 Aug

சிதம்பரத்தை பேச அனுமதிக்க கூடாது - சிபிஐ தரப்பு எதிர்ப்பு
4:51 PM, 22 Aug

முன்னாள் அமைச்சர் என்பதற்காக சலுகை தர கூடாது - சிபிஐ
4:50 PM, 22 Aug

சிதம்பரத்திடம் கேள்வி கேட்க விரும்பினால் நீதிமன்றம் கேட்கலாம் - அபிஷேக் மனு சிங்வி
4:44 PM, 22 Aug

ப. சிதம்பரத்தை கண்டிப்பாக காவலில் எடுக்க வேண்டும் - சிபிஐ. ப. சிதம்பரம் தரப்பு வாதிட்ட போது சிபிஐ தரப்பு குறுக்கீடு.
4:28 PM, 22 Aug

ப. சிதம்பரத்திற்கு எப்போது சம்மன் அனுப்பினீர்கள் - சிபிஐக்கு நீதிபதி அஜய் குமார் கேள்வி
4:25 PM, 22 Aug

ப. சிதம்பரத்தின் இடைக்கால முன் ஜமீனை 7 மாதம் கழித்து ரத்து செய்தது ஏன்? - அபிஷேக் மனு சிங்வி
4:25 PM, 22 Aug

இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்து 4 மாதம் கழித்தே விசாரணை தொடங்கியது. அதன்பின்பே ப. சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் - அபிஷேக் மனு சிங்வி.
4:25 PM, 22 Aug

ப. சிதம்பரம் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதங்களை தொடங்கினார்
4:21 PM, 22 Aug

ப. சிதம்பரம் 24 மணி நேரமாக தூங்கவில்லை - கபில் சிபல்
4:15 PM, 22 Aug

நேற்று சிபிஐ சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை -கபில்சிபல்
4:12 PM, 22 Aug

அனைத்து கேள்விக்கும் ப. சிதம்பரம் இதுவரை பதில் சொல்லியுள்ளார். ஆதாரமே இல்லாமல் அவரை சிபிஐ தரப்பு கைது செய்துள்ளது - கபில் சிபல்.
4:10 PM, 22 Aug

ப.சியிடம் 12 கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளார்கள். அதுவும் 12 மணி வரை யோசித்து இந்த கேள்விகளை கேட்டுள்ளனர். ப.சியிடம் கேட்க அவர்களிடம் கேள்விகளே இல்லை- கபில் சிபல்.
4:09 PM, 22 Aug

ப.சியிடம் கேட்ட கேள்வியை வேண்டும் என்று மீண்டும் கேட்டனர். அவர் ஏற்கனவே இதற்கு பதில் அளித்துவிட்டார். வேண்டும் என்றே இப்படி அவரை தொந்தரவு செய்துள்ளனர் - கபில் சிபல்
4:07 PM, 22 Aug

ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள்- கபில் சிபல்
4:06 PM, 22 Aug

விசாரிக்கும் தேவை இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அவரை அழைத்திருக்கலாம் - கபில் சிபல்
4:06 PM, 22 Aug

சிபிஐ அழைப்பை சிதம்பரம் எப்போதும் நிராகரித்ததில்லை - கபில் சிபல்
4:06 PM, 22 Aug

இந்த வழக்கில் ப.சிதம்பரம் மட்டுமே குறி வைக்கப்படுகிறார். அந்நிய முதலீட்டு மேம்பட்டு வாரியத்தில் உள்ளவர்கள்தான் இதற்கு அனுமதி அளித்தனர். ஆனால் அதில் யாருமே விசாரணை செய்யப்படவில்லை - கபில் சிபல்.
4:02 PM, 22 Aug

ப. சிதம்பரத்திற்கு இந்த வழக்கில் நேரடியாக தொடர்பு எதுவும் இல்லை - கபில் சிபல்
4:02 PM, 22 Aug

ப. சிதம்பரம் நிதி அமைச்சராக கையெழுத்து மட்டுமே போட்டார் - கபில் சிபல்
4:02 PM, 22 Aug

10 வருடம் கழித்துதான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது- கபில் சிபல் வாதம்
4:02 PM, 22 Aug

ப.சிதம்பரம் தவிர வழக்கு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை- கபில் சிபல் வாதம்
4:00 PM, 22 Aug

ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் ஏற்கனவே விசாரணை முடிந்துவிட்டது - கபில் சிபல்
4:00 PM, 22 Aug

அதனால் இந்த வழக்கில் கஸ்டடி விசாரணை தேவையில்லை - கபில் சிபல்
READ MORE

breaking news live updates of inx case p chidambaram gets 2 hour notice from cbi
English summary
Former Finance miniser P Chidambaram has got 2 hour notice from CBI to appear for an inquiry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X