டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சானிட்டரி நாப்கின்.. மரபுகளை உடைத்த மோடி.. ஒரு பிரதமர் இப்படி பேசுவது இதுவே முதல்முறை.. கிரேட்!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் நேற்று சானிட்டரி நாப்கின் குறித்து பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    மரபுகளை உடைத்த மோடி.. நாப்கின் குறித்து பேசிய முதல் பிரதமர்

    நாட்டின் 74வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மிகவும் சிறப்பாக நாடு முழுக்க விழா கொண்டாடப்பட்டது. இதற்காக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.கொரோனா பரவலுக்கு இடையே கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று கூட்டம் நடைபெற்றது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேசிய கொடியேற்றி வைத்தார்.கொரோனா பாதிப்பு, எல்லை பிரச்சனை என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று தனது உரையில் குறிப்பிட்டார்..

    சென்னை தந்த பயிற்சி.. பிரதமர் மோடி அருகே செங்கோட்டையில் நின்றாரே.. அந்த பெண் அதிகாரி யார் தெரியுமா?சென்னை தந்த பயிற்சி.. பிரதமர் மோடி அருகே செங்கோட்டையில் நின்றாரே.. அந்த பெண் அதிகாரி யார் தெரியுமா?

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    இந்த சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, நேற்று சானிட்டரி நாப்கின் குறித்து பேசினார். நாடு முழுவதும் ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது. இந்த அரசு எப்போதும் நம் நாட்டு மகள்கள், சகோதரிகளின் ஆரோக்கியம் குறித்த அக்கறை கொண்டு இருக்கிறது. பெண்களின் ஆரோக்கியம் இந்த நாட்டிற்கு மிக முக்கியம். பெண்களின் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு அவசியம்.

    மாதவிடாய் எப்படி

    மாதவிடாய் எப்படி

    இதற்காக நாடு முழுக்க நாங்கள் 6000 சென்டர்களை அமைத்து உள்ளோம். இங்கு எளிதாக பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பெற முடியும். மொத்தம் 50 மில்லியன் சானிட்டரி நாப்கின்களை பெண்கள் கடந்த வருடம் இதன் மூலம் பெற்று இருக்கிறார்கள். பெண்களை முன்னேற்றுவதில் நாங்கள் குறிக்கோளுடன் செயல்படுகிறோம். இதற்காக இந்த அரசு திட்டங்களை கொண்டு வருகிறது.

    குறிக்கோள்

    குறிக்கோள்

    கடற்படை, விமானப்படை அனைத்திலும் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான உயர் பதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் இப்போது தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்தியாவின் தூண்கள். அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார்.

    செம

    செம

    பிரதமர் மோடி தனது பேச்சில் சானிட்டரி நாப்கின் குறித்து பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுதந்திர தின உரையில் ஒரு பிரதமர் சானிட்டரி நாப்கின் குறித்தும் மாதவிடாய் குறித்தும் பேசுவது இதுவே முதல்முறையாகும். பெண் ராணுவ மேஜர் ஸ்வேதா பாண்டேவிற்கு நேற்றுதான் பிரதமர் மோடி செங்கோட்டையில் மரியாதை செலுத்தினார்.

    சூப்பர் பேச்சு

    சூப்பர் பேச்சு

    அதே நாளில் அவரை வைத்துகொன்டே பெண்களின் ஆரோக்கியம் குறித்து பிரதமர் மோடி பேசி இருக்கிறார் . இதுதான் இவரின் பேச்சு வரவேற்பை பெற முக்கிய காரணம் ஆகும். அதேபோல் பொதுவாக தலைவர்கள் பெரிய மேடைகளில் மாதவிடாய் குறித்து பேசுவது இல்லை. பெண் தலைவர்கள் கூட இதை விழா மேடைகளில் குறிப்பிட்டு பேசியது இல்லை.

    விலக்கு இல்லை

    விலக்கு இல்லை

    எப்போதும் இது ஒரு விலக்கப்பட்ட டாப்பிக் என்றுதான் இருந்துள்ளது. அதிலும் ஆண்கள் சானிட்டரி நாப்கின் குறித்து பொதுவில் பேசவே கூச்சம் அடைவார்கள் . அப்படி இருக்க பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் சானிட்டரி நாப்கின் குறித்து பேசியுள்ளார். இது இயற்கையான விஷயம் என்பதை உணர்த்தும் வகையில் மோடி இயல்பாக பேசினார். இந்தியாவில் பல நெடுங்காலமாக விளங்கும் மரபு இதன்மூலம் தகர்த்து எறியப்படும் என்று நம்புவோம்!

    English summary
    Breaking the taboo: Why PM Modi's Independence speech on the sanitary napkin is important?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X