டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னும் 30 நிமிடம்தான்.. வல்லுநர்களை வர சொல்லுங்கள்.. டெல்லி மாசு பற்றி நீதிபதிகள் அதிரடி உத்தரவு!

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு தீர்வாக ஐ.ஐ.டி. நிபுணர் குழு, சுற்றுச்சூழல் நிபுணர்களை அரை மணி நேரத்தில் மத்திய அரசு அழைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு தீர்வாக ஐ.ஐ.டி. நிபுணர் குழு, சுற்றுச்சூழல் நிபுணர்களை அரை மணி நேரத்தில் மத்திய அரசு அழைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தலைநகர் டெல்லி தற்போது சுவாசிக்க முடியாமல் திணறி வருகிறது. உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. சில இடங்களில் டெல்லியில் காற்று மாசின் அளவு 1010 புள்ளிகளை விட அதிகமாக இருக்கிறது.

தற்போது டெல்லியில் காற்றின் நிலை மோசமான நிலை + (severe plus) அடைந்து இருக்கிறது. தீபாவளிக்கு பிறகு டெல்லியில் வரிசையாக காற்று அதிக அளவில் மாசுபட்டது. தற்போது அங்கு காற்று சுவாசிக்க முடியாத நிலையில் கடந்த 48 மணி நேரமாக இருக்கிறது.

என்ன வழக்கு

என்ன வழக்கு

டெல்லி மாசுபாட்டிற்கு எதிராக பல்வேறு பொதுநல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று சிறப்பு அமர்வு முன் நடைபெற்றது. நீதிபதிகள் ஜேஜே அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா அமர்வு இது தொடர்பான மனுவை விசாரித்தனர்.

டெல்லியில் மக்கள் செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. அரசு வேடிக்கை பார்க்கிறது..சுப்ரீம் கோர்ட் வேதனைடெல்லியில் மக்கள் செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. அரசு வேடிக்கை பார்க்கிறது..சுப்ரீம் கோர்ட் வேதனை

நீங்கள்தான் பொறுப்பு

நீங்கள்தான் பொறுப்பு

இது தொடர்பாக நீதிபதிகள் சரமாரி உத்தரவை இன்று பிறப்பித்தது. அதில், டெல்லி மாசு பாட்டிற்கு மாநில அரசுகள்தான் இதற்கு பொறுப்பு. இதற்கு முன் இருந்த மாநில அரசுகளும், இதற்கு காரணம். தேர்தலில் மட்டும்தான் இந்த அரசுகள் எல்லாம் கவனம் செலுத்தி இருக்கிறது. மத்திய அரசுகள் இதை வைத்து கேலிக்கூத்து போல செய்து கொண்டு இருக்கிறது.

முடியாது

முடியாது

மாநில அரசுகள் இதற்கு முழு பொறுப்பு என்று இப்போது கூறுகிறோம், மேல் இருந்து கீழ் வரை அனைத்திற்கும் மாநில அரசுதான் பொறுப்பு. நம்மால் இந்த காலநிலையில் வாழ முடியாது. இப்படி இன்னும் எத்தனை நாட்கள் நாம் இப்படியே வாழ முடியும்? இதற்கு அதிகாரிகளும் ஒரு வகை பொறுப்புதான்.

பஞ்சாப்

பஞ்சாப்

மக்களை சாகவிட்டு அதிகாரிகள் வேடிக்கை பார்க்கிறார்கள். பஞ்சாப்பில் 7% காற்று மாசு அதிகம் ஆகியுள்ளது. அதனால் பஞ்சாப் அரசும் இதற்கு பொறுப்பு. ஹரியானாவில் 17% அதிகம் ஆகியுள்ளது. டெல்லி புகை காரணமாக மக்கள் இங்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

உடனே அழைக்க வேண்டும்

உடனே அழைக்க வேண்டும்

உடனடியாக இதற்கு வல்லுனர்கள் தீர்வு சொல்ல வேண்டும். ஐ.ஐ.டி. நிபுணர், சுற்றுச்சூழல் நிபுணர்களை அரை மணி நேரத்தில் மத்திய அரசு அழைக்க வேண்டும். காற்று மாசு தடுப்பு நடவடிக்கை தொடர்பான பரிந்துரைகளை அளிக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

English summary
Bring the Expert team here in 30 Minutes says Supreme Court in a case against Delhi pollution today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X