டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாகிஸ்தானின் முதல் சீக்கிய செய்தி வாசிப்பாளரின் சகோதரர் கொலை.. இந்தியா கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

டெல்லி: பெஷாவரில் பாகிஸ்தான் நாட்டின் முதலாவது சீக்கிய செய்தி வாசிப்பாளரான ஹர்மீத் சிங் சகோதரர் ரவீந்தர் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் சமீபத்தில் சில மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்கு முன்பாக, ரவீந்தர் சிங், பெஷாவர் நகரில் வைத்து இன்று மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Brother of Pakistans first news anchor Killed

ரவீந்தர் சிங்கிற்கு திருமணம் நிச்சயம் ஆன நிலையில் மலேசியாவில் இருந்து அவர் பாகிஸ்தான் வருகை தந்திருந்தார். அங்கே இன்று ஷாப்பிங் சென்ற போது இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.

கொஞ்ச நாளில் திருமணம்.. ஆசையாக ஷாப்பிங் போன ரவீந்தர் சிங்.. சுட்டு கொலை.. பாகிஸ்தானில் பகீர்கொஞ்ச நாளில் திருமணம்.. ஆசையாக ஷாப்பிங் போன ரவீந்தர் சிங்.. சுட்டு கொலை.. பாகிஸ்தானில் பகீர்

இதனிடையே இந்த கொலைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதுபற்றி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மை சீக்கிய இனத்தவர்களை, குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொலை மற்றும் குருத்வாரா மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீக்கிய இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை வற்புறுத்தி முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம் வாலிபரை திருமணம் செய்து வைக்கப் பட்டதாகவும் ஒரு சர்ச்சை எழுந்திருந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக சீக்கியர்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

English summary
India strongly condemns the targeted killing of minority Sikh community member in Peshawar that follows the recent despicable vandalism and desecration of the holy Gurdwara Sri Janam Asthan at Nankana Sahib.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X