டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த பட்ஜெட்தான் முக்கியம்.. தேர்தலுக்காக மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் பாஜக!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு வருகின்ற பட்ஜெட்டின் போது பாஜக மிக முக்கியமான அறிவிப்பை ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வருகின்ற பட்ஜெட்டின் போது பாஜக மிக முக்கியமான அறிவிப்பை ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தல் வந்துவிட்டது டும்.. டும்.. டும்.. என்றுதான் அனைத்து கட்சிகளுக்கும் தற்போது கேட்டுக்கொண்டு இருக்கிறது. ஆம், லோக்சபா தேர்தலில் என்ன செய்து மக்களின் வாக்குகளை வாங்கலாம் என்று அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக யோசித்து வருகிறது.

இதற்காக பாஜக, காங்கிரஸ் நிறைய திட்டங்களை வகுத்து வருகிறது. அதன் ஒருகட்டமாக நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல்

வரும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதில் முழு பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கண்டிப்பாக முழு பட்ஜெட் தாக்கல் செய்ய மாட்டோம் என்று பாஜக கூறியுள்ளது.

சில சிறப்பு திட்டங்கள்

சில சிறப்பு திட்டங்கள்

இந்த பட்ஜெட்டில் சில சிறப்பு திட்டங்கள் இருக்கும் என்று கூறுகிறார்கள். லோக்சபா தேர்தலில் மக்களின் வாக்குகளை வாங்கும் வகையில் சில சிறப்பு திட்டங்கள் இதில் இருக்கும் என்று குறிப்பிடுகிறார்கள். முக்கியமாக நடுத்தர வர்க்கத்து மக்களின் வாக்குகளை கவரும் வகையில் இந்த திட்டங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

விவசாய மக்கள்

விவசாய மக்கள்

இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். அதாவது விவசாயிகள்தான் இந்தியாவில் தற்போது ஆளும் பாஜக மீது அதிக கோபத்தில் இருப்பது. அதனால் அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் சலுகைகள் கொண்டு வர உள்ளனர். சமயங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

அதேபோல் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையிலும், இதில் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது என்கிறார்கள். வேலைவாய்ப்பு இந்த தேர்தல் முடிவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் இளைஞர்கள் வாக்குகளை கவரும் வகையில் புதிதாக நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க, இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறார்கள்.

என்ன முக்கிய அறிவிப்பு

என்ன முக்கிய அறிவிப்பு

இது இல்லாமல் வேறு ஒரு முக்கிய அறிவிப்பை பாஜக வெளியிடும் என்றும் கூறுகிறார்கள். 10% இடஒதுக்கீடு போல பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்றை பாஜக இந்த பட்ஜெட்டில் வெளியிடும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது என்ன மாதிரியான அறிவிப்பு என்று விவரங்கள் வெளியாகவில்லை.

English summary
Budget 2019: BJP plans for a very BIG announcement in this session amidst Lok Sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X