டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2019: விலை உயரும், விலை குறையும் பொருட்கள் இவைதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    BUDGET 2019 | விலை உயரும், விலை குறையும் பொருட்கள் இவைதான்!- வீடியோ

    டெல்லி: மோடி அரசின் 2வது ஆட்சி காலத்து முதல் பட்ஜெட்டில், சில முக்கியமான வரி விகிதங்களை மாற்றியமைத்துள்ளார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    இதன் மூலம், சில பொருட்களின் விலை உயரப்போகிறது, சில பொருட்களின் விலை குறையப்போகிறது. முக்கியமான விலைவாசி மாற்றங்களுக்கு இந்த பட்ஜெட் வழிகோலியுள்ளது.

    Budget 2019: What is cheaper and what is costlier?

    அதுகுறித்த ஒரு சுருக்கமான பார்வை இதோ:

    விலை உயரும் பொருட்கள்:

    * பெட்ரோல், டீசல் விலை உயரப்போகின்றன. இதற்கு காரணம், அவற்றின் மீது லிட்டருக்கு 1 ரூபாய் செஸ் வரியாக விதித்துள்ளார் நிர்மலா சீதாராமன்

    * தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களின் விலையும் உயரப்போகிறது. இதற்கு காரணம், அவற்றின் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது

    * இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள் மீது 5 சதவீதம் சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயரும்

    * ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியிலிருந்து பணம் எடுத்தால் 2 சதவீதம் வரி

    * இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரி பாகங்கள்

    * சிசிடிவி கேமராக்கள், ஐபி கேமராக்கள்

    * பிவிசி

    * வினைல் ஃப்ளோரிங்

    * உலோக ஃபிட்டிங்குகள்

    * டைல்ஸ்

    * இறக்குமதி செய்யப்பட்ட உடைத்த முந்திரி கொட்டைகள்

    விலை குறையும் பொருட்கள்:

    * எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 12% இருந்து, 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுக்கும் என அறிவித்திருப்பதால் அவற்றின் விலை குறையும்

    * சொந்த குறைந்த விலை வீடுகள்

    * இறக்குமதி செய்யப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்

    * எலக்ட்ரிக் வாகனங்களுக்காக, இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்கள்

    இந்த பொருட்களின் விலைகளில்தான், பட்ஜெட் தாக்கத்தை ஏற்படுத்தி, விலை உயர்வு மற்றும் விலை குறைப்புக்கு காரணமாக மாறப்போகிறது.

    English summary
    Finance Minister Nirmala Sitharaman's first budget proposed a number of changes to levies several items. Here is your list of things that will cost more and less.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X