டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதெல்லாம் நடந்தால் போதும்.. நிர்மலா சீதாராமனின் 'மேஜிக்' வேலை செய்யுமா? மிக முக்கியமான 10 விஷயங்கள்!

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள 2020-2021 மத்திய பட்ஜெட்டில் மிக முக்கியமான 10 விஷயம் அதிக கவனம் பெறுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2020 : Nirmala Sitharaman will launch the budget today

    டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள 2020-2021 மத்திய பட்ஜெட்டில் மிக முக்கியமான 10 விஷயம் அதிக கவனம் பெறுகிறது.

    இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, தங்க கையிருப்பு, பணமதிப்பு, வருமான வரிக் குறைப்பு,ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, வட்டிக் குறைப்பு, வீட்டு வசதித் திட்டம், வருமான வரிச் சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது,.

    என்ன விஷயம்

    என்ன விஷயம்

    இந்த பட்ஜெட்டில் பின் வரும் விஷயங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

    மத்திய அரசு நிதி பற்றாக்குறை இலக்கிற்கான வரம்புகளை தளர்த்தும் என்று கூறுகிறார்கள் . பொருளாதார மந்த நிலை காரணமாக, வருமானம் குறைந்துள்ளது. இதனால் அரசுக்கு வரும் வரியும் குறையும். இதனால் நிதி பற்றாக்குறை இலக்கை குறைக்க வாய்ப்புள்ளது .

    இந்தியாவின் ஜிடிபி மிக மோசமான 4.5 சதவிகிதம் என்ற நிலையில் இருக்கும் போது இந்த பட்ஜெட் தாக்கல் செயப்படுகிறது. 2013க்கு பிறகு இதுதான் மிகவும் குறைவான ஜிடிபி. இதனால் ஜிடிபி தொடர்பான மேஜிக் அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என்றும் கூறுகிறார்கள்.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    நேற்று வெளியான பொருளாதார சர்வே மூலம் இந்தியாவின் ஜிடிபி இந்த நிதியாண்டில் இறுதியில் 5 சதவிகிதத்தை அடையும் என்று கூறப்பட்டது. அதேபோல் 2021 மார்ச்சில் 6-6.5%ஐ அடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யும் வகையில் இன்று அறிவிப்பு வெளியாகலாம்.

    அதேபோல் தனியார்மயமாக்கல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 1.5 லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு தனது முதலீட்டை திரும்ப பெற வாய்ப்புள்ளது. இதில் தனியார் அனுமதிக்கப்படலாம். ஏற்கனவே ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகியவற்றை மத்திய அரசு விற்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    நுகர்வோர் பணவீக்கம்

    நுகர்வோர் பணவீக்கம்

    நுகர்வோர் பணவீக்கம் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்று கூறுகிறார்கள். இதுதான் காய்கறிகள், பொருட்கள் விலைவாசி உயர்விற்கு காரணம் ஆகும். இந்த நுகர்வோர் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், இதை குறைக்கும் வகையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.

    பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள்,வேலைவாய்ப்பு, தங்க கையிருப்பு, பணமதிப்பு, ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, வட்டிக் குறைப்பு, வீட்டு வசதித் திட்டம்,வருமான வரிச் சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

    வரிக்குறைப்பு

    வரிக்குறைப்பு

    அதேபோல் வரிக்குறைப்பு தொடர்பான முக்கியமான அறிவிப்புகளும் இன்று வெளியாக வாய்ப்புள்ளது. வருமான வரிக் குறைப்பு தொடர்பாக அறிவிப்புகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வங்கிகள் துறை தொடார்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . 2018ல் இருந்து வங்கிகள் துறை பெரிய அளவில் அடி வாங்கியுள்ளது. அதை சரிகட்டும் வகையில் இன்று அறிவிப்பு வெளியாகலாம்.

    வேறு என்ன

    வேறு என்ன

    நுகர்வோர் நம்பிக்கை எனப்படும் Consumer confidence தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும். இதன் மூலம்தான் ஒரு நாட்டின் வேலைவாய்ப்பு, பணவீக்கம் , வருவாய், செலவு தீர்மானிக்கப்படும். 2014ல் இருந்து வருடா வருடம் இது குறைந்து கொண்டே வருகிறது. கடந்த வருடம் இது 97.30 புள்ளிகள் குறைந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் இன்று அறிவிப்பு வெளியாகலாம்.

    அதேபோல் முதலீட்டு துறையில் 105 லட்சம் ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை உருவாக்கும் விதமான அறிவிப்புகள் வெளியாகலாம். முக்கியமாக கட்டுமான துறையில் இதற்கான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Budget 2020: 10 things to expect from Finance Minister Nirmala Sitharaman today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X