டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்.. இனி அதகளம்தான்

Google Oneindia Tamil News

Recommended Video

    அல்வா கிண்டிய நிர்மலா சீதாராமன் - வீடியோ

    டெல்லி: பொது பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரபுப்படி அல்வா கிண்டினார்.

    மத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து பட்ஜெட் உரையை அச்சடிக்கும் பணிகள் இன்று துவங்கி உள்ளன.

    Budget 2020: Finance Minister Nirmala Sitharaman at Halwa Ceremony

    மரபுப்படி இவ்வாறு பட்ஜெட் உரை அச்சடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் முன்பாக, நிதியமைச்சரால், அல்வா கிண்டப்படுவது வழக்கம். இந்த அல்வா, நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இனிப்புடன் பட்ஜெட் உரை அச்சடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது இந்த மரபின் பின்னணியில் உள்ள பொருள் ஆகும்.

    இந்த நிலையில்தான் டெல்லி நாடாளுமன்றத்திலுள்ள வடக்கு பிளாக் பகுதியில் உள்ள நிதி அமைச்சக அலுவலகத்தில் இன்று அல்வா கிண்டும் பணியை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இதில் நிதியமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதனிடையே, இரும்பு உற்பத்திக்கு தேவையான நிலக்கரி, சுண்ணாம்பு உள்ளிட்டவற்றுக்கு 2.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. எனவே எதிர்வரும் பட்ஜெட்டில் இரும்பு உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று இத்துறை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    English summary
    Delhi: Finance Minister Nirmala Sitharaman at 'Halwa Ceremony' being held at Ministry of Finance, North Block, to mark the beginning of printing of documents relating to Union Budget 2020-21.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X