டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளிநாடு வாழ் இந்தியர்களே.. உங்களுக்கு பட்ஜெட்டில் ஒரு முக்கிய அறிவிப்பு.. அதிகரிக்கும் வரி கெடுபிடி

Google Oneindia Tamil News

டெல்லி: இன்னும் அதிக வெளிநாடு வாழ் இந்தியர்களையும், வருமான வரி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது.

Budget 2020: Govt proposes Income tax on non-taxpaying NRIs

அப்போது தனிநபர் வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் வருவாய்த் துறைச் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே.

அவர் கூறியதாவது: வருமான வரி சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். இதுவரை, வருடத்தில் 182 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்தால் அவர் வெளிநாடுவாழ் இந்தியர் என்று கருதப்படுவார். இனிமேல் வருடத்தில் குறைந்தபட்சம் 240 நாட்களாவது வெளிநாட்டில் இருந்தால்தான் அவர் இந்தியர் இல்லை என்று கருதப்படுவார் என்று தெரிவித்தார்.

புதிய வருமான வரி விதிப்பில் பிஎப், கல்வி கட்டணம்.. இதற்கெல்லாம் விலக்கு கேட்பதை அடியோடு மறந்திடுங்கபுதிய வருமான வரி விதிப்பில் பிஎப், கல்வி கட்டணம்.. இதற்கெல்லாம் விலக்கு கேட்பதை அடியோடு மறந்திடுங்க

அதாவது, வருடத்தில் 120 நாட்களுக்கும் மேலாக வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தாயகத்தில் தங்கிவிட்டால் அவரும் வருமானவரி பிரிவின் கீழ் வந்து விடுவார்.

இதுகுறித்து பொருளாதார வல்லுனர்கள் கூறுகையில், இது ஒரு மோசமான முன்னுதாரணம். பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் பணியாற்றக்கூடிய நாட்டில் மிகக் குறைந்த அளவுக்கான வருமான வரி செலுத்துகிறார்கள். அல்லது, துபாய் போன்ற நாடுகளில் வருமானவரி என்பதே கிடையாது அவர்கள் இப்போது இந்தியாவில் வருமான வரி செலுத்தக் கூடிய நிலைமை உருவாகிவிட்டது, மோசமான நடவடிக்கை என்று எச்சரிக்கின்றனர்.

English summary
If an Indian national, to claim the non-resident status, can’t stay in India for 120 days or more in a year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X