டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன இப்படி கலாய்ச்சிட்டாரே.. மோடியின் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட ராகுல்.. வைரல் டிவிட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவு செய்த பிரதமர் மோடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ஷேர் செய்து, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய பொருளாதாரத்தை கிண்டல் செய்துள்ளார்.

    இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் வருமான வரி அறிவிப்பு தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியானது.

    Budget 2020: It might just start the economy, Rahul Trolls Modi in a unique way

    ஆனால் இந்த அறிவிப்புகள் இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தாது என்கிறார்கள். அதேபோல், இதனால் நேற்று இந்திய பங்குச்சந்தை பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் வீடியோ ஒன்றை ஷேர் செய்து, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய பொருளாதாரத்தை கிண்டல் செய்துள்ளார்.

    அதில், தயவு செய்து உங்களுடைய மேஜிக் உடற் பயிற்சியையே மீண்டும் சில நாட்களுக்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு தெரியாது, ஒருவேளை மோசமாக இருக்கும் இந்திய பொருளாதாரத்தை அது நல்லதாக மாற்றத் தொடங்கும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    இதற்காக ராகுல் காந்தி கடந்த வருடம் ஃபிட் இந்தியா பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி செய்த உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். ஃபிட் இந்தியா என்பது மோடி தொடங்கி வைத்த இயக்கம். மான் கீ பாத் நிகழ்ச்சிக்காக வானொலியில் பேசும்போது ஃபிட் இந்தியா குறித்தும் பேசினார் மோடி. இதற்கு அடுத்த இந்த ஃபிட் இந்தியா சேலஞ்ச் வைரல் ஆனது.

    இதையடுத்து கோஹ்லி, இந்த சேலஞ்ச்சை ஏற்பதாக கூறி உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். மேலும் பிரதமர் மோடியும் இதை ஏற்க வேண்டும் என்றார். அதையடுத்து மோடி உடற்பயிற்சி செய்து வெளியிட்ட வீடியோ பெரிய வைரல் ஆனது. இதைத்தான் காமெடியான இசை சேர்த்து ராகுல் காந்தி வெளியிட்டு கிண்டல் செய்துள்ளார்.

    English summary
    Budget 2020: It might just start the economy, Rahul Trolls Modi in a unique way with a video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X