டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்ஜெட் 2020: வரிகளில் மாற்றம்.. எந்த பொருள் விலை ஏறும், எது விலை குறையும்?

Google Oneindia Tamil News

Recommended Video

    Union Budget 2020 | Make in India | Imported items may get costlier

    டெல்லி: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-21 பட்ஜெட் எதிரொலியால், சில பொருட்களின் விலை ஏற உள்ளது, சில பொருட்கள் விலை குறைய உள்ளது.

    வரி விதிப்புகளில், ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, இந்த விலையேற்றம் மற்றும் விலை குறைப்பு அமலுக்கு வர உள்ளது. இதோ அது குறித்த ஒரு பார்வை:

    Budget 2020: Many products will get Costly and many become cheap

    விலை உயரும் பொருட்கள்:

    - சிகரெட், புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயரும்

    - இறக்குமதி செய்யப்பட்ட காலணிகள் மற்றும் பர்னிச்சர்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது

    - மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி மீது செஸ் வரி வசூலிக்கப்பட்டுள்ளது

    - சுவர் மின் விசிறிகள் மீதான சுங்க வரி 7.5% லிருந்து 20%ஆக அதிகரித்துள்ளது

    - பீங்கான் அல்லது சீனா பீங்கான், களிமண் இரும்பு, எஃகு, தாமிரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட மேஜைப் பாத்திரங்கள் / சமையலறைப் பொருட்களின் மீதான வரி 20% ஆக, அதாவது இரட்டிப்பாகியுள்ளது

    விலை குறைய உள்ள பொருட்கள்:

    - செய்தி பிரின்ட், குறைந்த எடை பூசப்பட்ட காகிதத்திற்கான சுங்க வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது

    - சுத்திகரிக்கப்பட்ட டெரெப்தாலிக் அமிலத்தின் (ஆடை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்க பயன்படும்) மீதான வரி ரத்து செய்யப்பட்டது

    - கச்சா சர்க்கரை, வேளாண் விலங்கு சார்ந்த பொருட்கள், ஆடையெடுத்த பால், சில மது பானங்கள், சோயா ஃபைபர், சோயா புரதம் ஆகியவற்றிற்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

    English summary
    Many products will get Costly and many become cheap after budget 2020, here is the list.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X