டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்.. கைதட்டி பாராட்டிய எம்பிக்கள்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காஷ்மீரி மொழியில் திடீர் என்று பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காஷ்மீரி மொழியில் திடீர் என்று பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் தற்போது உரையாற்றி வருகிறார்.

Budget 2020: Our country is like the flowering Shalimar Baghsays Finance Minister Nirmala

இந்த நிலையில் அவையில் பேசிக்கொண்டு இருக்கும் போதே, திடீர் என்று நிர்மலா சீதாராமன் காஷ்மீர் மொழியில் பேச தொடங்கினார். அதில், நான் காஷ்மீர் மொழியின் வாசகம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நம்முடைய நாடு என்பது ஷாலிமார் பாக் பகுதியில் மலரும் மலர் போன்றது. தால் ஏரியல் எல்லா வருடமும் பூத்துக் குலுங்கும் தாமரை மலர் போன்றது. மக்களின் இதயத்தில் இருக்கும் அன்பு போன்றது.

3 முக்கியமான விஷயத்தை மனதில் வைத்தே பட்ஜெட்டை உருவாக்கினேன்.. விளக்கிய நிர்மலா.. என்ன தெரியுமா?3 முக்கியமான விஷயத்தை மனதில் வைத்தே பட்ஜெட்டை உருவாக்கினேன்.. விளக்கிய நிர்மலா.. என்ன தெரியுமா?

நம்முடைய வீரமான வீரர்களின் ரத்தத்தில் ஓடும் சூடான ரத்தம் போன்றது. என்னுடைய நாடு, உங்களுடைய நாடு , நம்முடைய நாடு. - இதுதான் உலகிலேயே மிகவும் சிறந்த நாடு, என்று குறிப்பிட்டார். பின் இந்த வரி எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக, அதை இந்தியில் குறிப்பிட்டார்.

நிர்மலா சீதாராமன் இப்படி காஷ்மீரி மொழியில் பேசியதும், அவையே ஆரவாரமாக கைதட்ட தொடங்கியது. காஷ்மீர் பிரச்சனை நடந்து வரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் காஷ்மீரி மொழியில் பேசியது மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

English summary
Budget 2020: Our country is like the flowering Shalimar Baghsays Finance Minister Nirmala SItharaman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X