டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த முறை பொருளாதார நிலை பற்றி நல்ல விவாதங்கள் நடக்கணும்.. இதுவே என் ஆசை... பட்ஜெட் குறித்து மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட்டில் கவனிக்கபட முக்கியமாக வேண்டிய விஷயங்கள் என்ன | Budget 2020: key things to watch for

    டெல்லி: நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் அனைவருக்கும் உகந்ததாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையுடன் இன்று தொடங்கி உள்ளது. நாளை நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கான 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    budget 2020: PM Modi says I want that in both houses there should be good debates on economic issues

    இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு இன்று வந்தார். அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த மத்திய பட்ஜெட் அனைவருக்கும் உகந்த பட்ஜெட்டாக இருக்கும் என்றார்.

    இந்திய பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி. பொருளாதாரம் குறித்து விரிவான ஆலோசனைகள் நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது: கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது: கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை

    "இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 10 ஆண்டுகளுக்கு தேவையான ஒரு வலுவான அடித்தளத்தை அமைப்பதை நாம் அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த கூட்டத்தொடரில் முக்கியமாக பொருளாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும். இரு அவைகளிலும் பொருளாதாரம் குறித்து நல்ல விவாதங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    English summary
    PM Modi on budget 2020: I want that in both houses there should be good debates on economic issues
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X