டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிஏஏ.. டெல்லி கலவரம்... சரியும் பொருளாதாரம்.. நாளை தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு, நாளை மார்ச் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது

இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Budget 2020: The second session of Parliament set to start tomorrow

இதில் வருமான வரி அறிவிப்பு தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியானது. ஆனால் இந்த வருமான வரி அறிவிப்புகள், சீர் திருத்தங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாவது அமர்வு தொடங்க உள்ளது .

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு, நாளை மார்ச் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கியமான பிரச்சனைகளுக்கு இடையில் இந்த கூட்டத்தொடர் நடக்க உள்ளது. டெல்லியில் சிஏஏ போராட்டத்தில் கடந்த வாரம் கலவரம் ஏற்பட்டது.

பிறந்தநாளில் மு.க.ஸ்டாலினை troll செய்தாரா உதயநிதி? கொந்தளிக்கும் ட்விட்டர் உலகம்பிறந்தநாளில் மு.க.ஸ்டாலினை troll செய்தாரா உதயநிதி? கொந்தளிக்கும் ட்விட்டர் உலகம்

டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி கலவரத்தில் 275 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த கூட்டத்தொடரில் இந்த டெல்லி கலவரம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதேபோல் குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் நேற்று 2019 - 20 நிதி ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு (டிசம்பர் 2019) ஜிடிபி விவரங்கள் வெளியாயின.

நேற்று வெளியான 2019 - 20 நிதி ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டில் தான், இந்தியாவின் ஜிடிபி 4.7 சதவிகிதமாக கொஞ்சம் வளரலாம் எனக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இந்த ஜிடிபி தொடர்பாகவும் நாளை கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்கிறார்கள்.

English summary
Budget 2020: The second session of Parliament set to start tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X