டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2020: பற்றாக்குறைகளின் வகைகள்.. அவை எப்படி கணக்கிடப்படுகின்றன!

Google Oneindia Tamil News

டெல்லி: 2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை என்பது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

மூன்று வகையான பற்றாக்குறைகள் இந்திய பட்ஜெட்டில் இருக்கிறது அவை எப்படி கணக்கிடப்படுகின்றன என்பதை இப்போது பார்ப்போம்.

வருவாய் செலவினத்திற்கும் வருவாய் வரவுக்கும் இடையில் உள்ள வேறுபாடே வருவாய் பற்றாக்குறை என அறியப்படுகிறது. இது தற்போதைய அதிகப்படியான செலவினத்தின் மீதான அரசாங்கத்தின் வரவு பற்றாக்குறையைக் காட்டும்.

புதிய முகம்.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்புதிய முகம்.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்

வருவாய் பற்றாக்குறை

வருவாய் பற்றாக்குறை

வருவாய் பற்றாக்குறை விஷயத்தில் பொதுவாக அரசாங்கம் அவர்களின் செலவுகளைக் குறைக்க அல்லது அதன் வரிகளை அதிகரிக்க மற்றும் வரி அல்லாத வருமானங்களை அதிகரிக்க முயற்சிக்கிறது. புதிய வரிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமோ அல்லது அதிக வருவாய் ஈட்டும் அடுக்குகளில் மக்கள் மீதான வரியை அதிகரிப்பதன் மூலமோ இதைச் செய்யலாம்.

கடன் வாங்குவது

கடன் வாங்குவது

அரசாங்கத்தின் கடன் அல்லாத வரவானது மொத்த செலவை விட குறைவாக இருக்கும் போது, பற்றாக்குறையை சமாளிக்க பொதுமக்களின் பணம் கடன் வாங்கப்படுகிறது. கடன் அல்லாத வரவின் மொத்தத் தொகையை விட முழுச் செலவுத் தொகை அதிகப்படியாக இருப்பதே நிதி பற்றாக்குறை என அழைக்கப்படுகிறது.

நிதி பற்றாக்குறை

நிதி பற்றாக்குறை

நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம், அவற்றில் சில பொதுச் செலவுகளை மானியங்களை குறைத்தல், போனஸ் குறைத்தல், பயண செலவுகளை குறைத்தல், விடுமுறை காலத்தில் பணியாற்றினால் வழங்கப்படும் ஊதியத்தை குறைத்தல் போன்ற பல நடவடிக்கைகளை அரசு எடுக்கும். அதேநேரம் , வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் வரி அடிப்படை மறுசீரமைப்பு மற்றும் பொதுத்துறை பிரிவுகளில் பங்குகளை விற்பனை செய்தல் போன்ற வடிவங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தீர்வு நடவடிகைகள்

தீர்வு நடவடிகைகள்

நிதி பற்றாக்குறையில், கடன் வட்டி தொகையை கழித்து கூறப்படுவது முதன்மை பற்றாக்குறையாகும். இது அரசாங்கமானது தனது செலவினம் தவிர வட்டி கட்டுவதற்காக எவ்வளவு கடன் வாங்குகிறது என்பதைத் தெரியப்படுத்தும். அதிக முதன்மை பற்றாக்குறை நடப்பு ஆண்டில் புதிய கடன்களின் அளவை பிரதிபலிக்கிறது. இது ஏற்கனவே இருக்கும் கடன்களின் (நிதி பற்றாக்குறை) மேல் உள்ள தொகை என்பதால், கடன்களின் அளவைக் குறைக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

English summary
Budget 2020: Revenue Deficit, Fiscal Deficit, Primary Deficit this three are Budget deficits, & how they are calculated
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X