• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம்... பட்ஜெட்டில் அறிவிப்பு!

|

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்பட உள்ளது என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேர பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 budget announced a minimum wage would be set for all types of workers across the country

2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் வேலைவாய்ப்புத் துறை தொடர்பான அறிவிப்பு வெளியிட்டதாவது: சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

தனி நபர் வருமான வரியில் மாற்றமில்லை.. சலுகை காட்டாத அரசு.. மாத ஊதியம் பெறுவோர் ஏமாற்றம் தனி நபர் வருமான வரியில் மாற்றமில்லை.. சலுகை காட்டாத அரசு.. மாத ஊதியம் பெறுவோர் ஏமாற்றம்

நாடு முழுவதும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. பெண்கள் போதுமான பாதுகாப்புடன் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேர பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

English summary
It was announced in the federal budget that a minimum wage would be set for all types of workers across the country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X