டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரகசியமா ரெடியாகுது பட்ஜெட்.. நார்த் பிளாக்கில் இன்றிலிருந்து பொதுமக்கள், ஊடகங்களுக்கு நோ என்ட்ரி!

Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட் விவகாரம் : பாதுகாப்பு வளையத்திற்குள் நாடாளுமன்றம் - வீடியோ

    டெல்லி: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்படுவதை முன்னிட்டு அந்த அமைச்சகம் உள்ள நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள பாஜக, மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு நிதியமைச்சராகியுள்ள மற்றொரு பெண் நிர்மலா சீதாராமன் என்ற பெருமை பெற்றுள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் 2019-2020ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் வரும் ஜூலை 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இலக்கு 250 இடங்கள்.... இழுத்து போடு திரிணாமுல் பிரமுகர்களை.. மே.வங்கத்தில் பாஜக தடாலடி வியூகம்! இலக்கு 250 இடங்கள்.... இழுத்து போடு திரிணாமுல் பிரமுகர்களை.. மே.வங்கத்தில் பாஜக தடாலடி வியூகம்!

    ஊடகங்களுக்கு தடை

    ஊடகங்களுக்கு தடை

    இதனை முன்னிட்டு நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் இன்று தொடங்கியுள்ளன. இதன் காரணமாக நிதி அமைச்சகம் இயங்கி வரும் நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக்கில் பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இடைக்கால பட்ஜெட்

    இடைக்கால பட்ஜெட்

    நிதியமைச்சகம் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    மோசமான நிலையில் பொருளாதாரம்

    மோசமான நிலையில் பொருளாதாரம்

    தற்போது புதிய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான மந்த நிலையில் உள்ளது.

    நிர்மலா தலைமையில்

    நிர்மலா தலைமையில்

    இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் தயாரிப்பு குழுவில், இணை நிதியமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    அதிகாரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ குழு

    அதிகாரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ குழு

    இதற்கான அதிகாரப்பூர்வ குழு நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க், செயலாளர் கிரிஷ் சந்திர முர்மு, வருவாய்த்துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே, டிஐபிஏஎம் செயலாளர் அதனு சக்ரவர்த்தி மற்றும் நிதி சேவைகள் செயலாளர் ராஜீவ் குமார் ஆகியோரின் தலைமையில் செயல்படுகிறது.

    பாதுகாப்பு வளையத்தில் நிதித்துறை

    பாதுகாப்பு வளையத்தில் நிதித்துறை

    முழு நிதிநிலை அறிக்கையும் ரகசியமாக இருக்கும் வகையில் நிதியமைச்சகம் செயல்பட்டு வரும் நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு துப்புரவு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அமைச்சகத்தின் பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் தனியார் மின்னஞ்சல் வசதிகள் தடுக்கப்பட்டுள்ளன.

    தீவிர கண்காணிப்பு

    தீவிர கண்காணிப்பு

    இந்த 'தனிமைப்படுத்தப்பட்ட' காலகட்டத்தில், அமைச்சகத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளும் பாதுகாப்பு அதிகாரிகளால் மற்றும் டெல்லி போலீசாரால் தீவிரமாக கண்காணிக்கப்படும். மேலும் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளும், ஊழியர்களும் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாவார்கள்.

    நிர்மலாவின் கன்னிப் பட்ஜெட்

    நிர்மலாவின் கன்னிப் பட்ஜெட்

    59 வயதான நிர்மலா சீதாராமன் தனது கன்னிப் பட்ஜெட்டில் பணவீக்கம், உயரும் வசூலாகாத கடன் மற்றும் என்.பி.எப்.சி ல் உள்ள நிதிச் சிக்கல், வேலைவாய்ப்பு உற்பத்தி, தனியார் முதலீடுகள், ஏற்றுமதி மறுமலர்ச்சி, விவசாய சிக்கல் உள்ளிட்ட நிதி துறையில் உள்ள சிக்கல்களை குறைக்கும் வகையில் உரையாற்றுள்ளார்.

    5ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

    5ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

    17 வது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 17 முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெறும். 2019-20ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை ஜூலை 4 ம் தேதி சமர்ப்பிக்கப்படும். இதைத்தொடர்ந்து ஜூலை 5ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Central Govt's 2019 - 2020 Budget preparation works starts from today. Visitors and Media are not allowed in the North block where the finance ministry places.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X