டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 முதல் மொத்தம் 29 பேர் நிதியமைச்சராக செயல்பட்டு வந்துள்ளனர். மொத்தம் 75 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 1997- ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் கனவு பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது. ஏன் அவ்வாறு சொல்லப்பட்டது என்ற விவரங்களை இங்கே காணலாம்.

நிதி நிலை அறிக்கை என்று சொல்லப்படும் பட்ஜெட் எந்த ஒரு நாட்டிற்கும் மிகவும் அவசியமானது. ஒருநாட்டின் பொருளாதாரப்பாதையை தீர்மானிப்பதாகவும் அடுத்த ஒரு ஆண்டிற்கான திட்டங்களின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்குவது என பட்ஜெட் இன்றியமையதாதாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக கடந்த 1947 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகான முதல் பட்ஜெட்டை ஆர்.கே சன்முகம் ஷெட்டி தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட் 2023: அல்வாவில் மஞ்சள்..பட்ஜெட் நாளில் சிவப்பு..கோபுர பார்டர்..நிதியமைச்சர் குறியீடு மத்திய பட்ஜெட் 2023: அல்வாவில் மஞ்சள்..பட்ஜெட் நாளில் சிவப்பு..கோபுர பார்டர்..நிதியமைச்சர் குறியீடு

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல்

ஆர்.கே சன்முகம் ஷெட்டி தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கே அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது ராணுவத்திற்கு மட்டும் 40 சதவீத தொகை ஒதுக்கப்பட்டது. ஏனென்றால் நாடு சுதந்திரம் அப்போதுதான் அடைந்து இருந்ததால் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த அதிக தொகை ஒதுக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 முதல் மொத்தம் 29 பேர் நிதியமைச்சர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். மொத்தம் 75 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 76-வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த நிதி அமைச்சர் தாக்கல் செய்யும் 23-வது மத்திய பட்ஜெட்டாகும். முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் 7 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

கனவு பட்ஜெட்

கனவு பட்ஜெட்

1997 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கனவு பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது. தேவகவுடா பிரதமராக பதவி வகித்த காலம் அது. காங்கிரஸ் தயவுடன் தேவகவுடா பிரதமராக இருந்ததால் ஆட்சியில் ஸ்திரமான நிலை இருந்தது. அந்த ஆண்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் , வரி நடைமுறையில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. வருமான வரி 40 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. நிறுவனங்கள்(உள்நாட்டு) மீதான வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரியானது 55 சதவீதத்தில் இருந்து 48 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்தியாவின் வரி நடைமுறையில் மிகப்பெரும் மாற்ற கொண்டு வரப்பட்ட பட்ஜெட்களில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது. இந்த பட்ஜெட் தான் இந்தியாவின் கனவு பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது.

வரி சீர்திருத்தம்

வரி சீர்திருத்தம்

அதேபோல 1970 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் வரி 93.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. பொருளாதார ரீதியாக இந்தியா கடுமையான நெருக்கடியை அந்த சமயத்தில் சந்தித்து வந்ததால் இத்தகைய வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கடுமையான பொருளாதார நெருக்கடி

கடுமையான பொருளாதார நெருக்கடி


1991 ஆம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட் பொருளாதாரத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்தியா தவித்த போது இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு இருந்த கடுமையான கட்டுப்பாடுகளை எளிதாக்கப்பட்டது. பொதுத்துறையில் தனியார் முதலீட்டிற்கும் அப்போது அனுமதி வழங்கப்பட்டது.

English summary
A total of 29 people have served as Finance Ministers since India's independence in 1947. A total of 75 budgets have been tabled. In 1997, the budget presented by the then fbudget, budget 2023, budget 2023-24, union budget, union budget 2023, union budget 2023-24, budget news in tamil, budget 2023 expectations, budget 2023 in india, budget expectations 2023 live, budget 2023 date and time, budget 2023 income tax expectations, budget updates, union budget news, union budget highlights, union budget latest news in tamil, union budget updates, union budget 2023-24 highlights, budget 2023 india, Union Budget 2023-24 Highlights, Budget 2023 India, budget presented in 1997 which was called India's Dream Budget, Former Union Finance Minister P Chidambaram, Former Minister Chidambaram News, Dream Budget, India's Dream Budget, Dream Budget Related News, பட்ஜெட், பட்ஜெட் 2023, பட்ஜெட் 2023-24, மத்திய பட்ஜெட், மத்திய பட்ஜெட் 2023, யூனியன் பட்ஜெட் 2023-24, பட்ஜெட் செய்திகள், பட்ஜெட் 2023 எதிர்பார்ப்புகள், பட்ஜெட் 2023 இந்தியா, பட்ஜெட் 2023 மக்களின் எதிர்பார்ப்புகள், பட்ஜெட் 2023 தேதி மற்றும் நேரம், பட்ஜெட் 2023 வருமான வரி மீதான அப்டேட்ஸ் , பட்ஜெட் லேட்டஸ்ட் நியூஸ், மத்திய பட்ஜெட் 2023 ஹைலைட்ஸ், மத்திய பட்ஜெட் சமீபத்திய செய்திகள், யூனியன் பட்ஜெட் 2023-24 சிறப்பம்சங்கள், பட்ஜெட் 2023 இந்தியா, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம், முன்னாள் அமைச்சர் சிதம்பரம் செய்திகள், கனவு பட்ஜெட், இந்தியாவின் கனவு பட்ஜெட், கனவு பட்ஜெட் தொடர்பான செய்திகள், inance minister P. Chidambaram was called the dream budget. Here are the details of why it was said so.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X