டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஏஏ.. மேகாலயாவிலும் வெடித்த வன்முறை.. ஊரடங்கு உத்தரவு.. மொபைல் சேவை முடக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: சிஏஏ தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வெடித்த வன்முறைகளையடுத்து, மேகாலயா மாநிலத்தின் 6 மாவட்டங்களில் கலவரம் வெடித்தது. ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 10 மணி முதல் பிப்ரவரி 29 காலை 8 மணி வரை தலைநகர் ஷில்லாங் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

CAA: 1 Killed, internet services suspended in 6 Meghalaya Districts

மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில் குடியுரிமை சட்டத் திருத்தம் (சிஏஏ) மற்றும் இன்டர்னல் லைன் பெர்மிட் (ஐஎல்பி) குறித்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, காசி (Khasi) மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து அம்மாநிலத்தின் 6 மாவட்டங்களில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Recommended Video

    பற்றி எரிந்த தலைநகர்... டெல்லியின் தற்போதைய நிலை என்ன

    இச்சாமதி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு மற்றும் ஐஎல்பி சார்பு கூட்டத்தின் போது காசி மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களிடையே திடீரென மோதல்கள் வெடித்தன. இது பிற பகுதிகளுக்கும் பரவியது.

    சிஏஏ விவகாரம்.. ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு நன்றி.. சந்திப்புக்கு பின் அபுபக்கர் அதிரடி பேட்டி!சிஏஏ விவகாரம்.. ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு நன்றி.. சந்திப்புக்கு பின் அபுபக்கர் அதிரடி பேட்டி!

    கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ், மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ், கிழக்கு காசி ஹில்ஸ், ரி போய், மேற்கு காசி ஹில்ஸ் ஆகிய ஆறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் 48 மணி நேரம் மொபைல், இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிப்ரவரி 28ம் தேதியான நேற்று இரவு, 10 மணி முதல் பிப்ரவரி 29 காலை 8 மணி வரை ஷில்லாங் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு நிலைமை மேம்பட்டுள்ளது.

    English summary
    One person has been killed in clashes between Khasi Students Union members and non-tribals during a meeting on CAA and inner line permit (ILP) in Meghalaya's East Khasi Hills after which mobile internet services have been suspended in six districts, officials said on Saturday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X