டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க பிறப்பு சான்றிதழ் எங்கே.. முதலில் அதை காட்டுங்கள்.. மோடியிடம் கேட்கும் அனுராக் காஷ்யப்!

பிரதமர் மோடி தன்னுடைய பிறப்பு சான்றிதழ் மற்றும் தன்னுடைய அப்பாவின் பிறப்பு சான்றிதழை பொதுவில் வெளியிட வேண்டும் என்று பாலிவுட் இயக்குனர் நடிகர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தன்னுடைய பிறப்பு சான்றிதழ் மற்றும் தன்னுடைய அப்பாவின் பிறப்பு சான்றிதழை பொதுவில் வெளியிட வேண்டும் என்று பாலிவுட் இயக்குனர் நடிகர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் மற்றும் மாணவ அமைப்புகள், அரசியல் கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. இன்னொரு பக்கம் நாடு முழுக்க பல்வேறு பல்கலைகழகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசின் இந்த சட்ட திருத்ததை தொடக்கத்தில் இருந்து பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் எதிர்த்து வருகிறார். இந்த சட்டத்திற்கு எதிராக டிவிட்டரிலும், களத்திலும் நேரடியாக அனுராக் காஷ்யப் போராடி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் ஜேஎன்யூ சென்ற அனுராக் காஷ்யப், அங்கு மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

உங்களுடன் இருப்போம்.. கனிமொழியை தொடர்ந்து களமிறங்கிய உதயநிதி.. ஜேஎன்யூ மாணவர்களுடன் சந்திப்பு! உங்களுடன் இருப்போம்.. கனிமொழியை தொடர்ந்து களமிறங்கிய உதயநிதி.. ஜேஎன்யூ மாணவர்களுடன் சந்திப்பு!

சிஏஏ சட்டம்

சிஏஏ சட்டம்

இந்த நிலையில் தற்போது சிஏஏ சட்டம் குறித்து அனுராக் காஷ்யப் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் மோடி தன்னை படித்தவர் என்று கூறுகிறார். தனக்கு டிகிரி இருக்கிறது என்று கூறுகிறார். அவர் அரசியல் அறிவியல் பட்டம் படித்தாக கூறுகிறார். அதற்கு எங்கே இருக்கிறது.

பிறப்பு சான்றிதழ்

பிறப்பு சான்றிதழ்

அவர் தன்னுடைய பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் அதேபோல் அவரின் அப்பாவின் பிறப்பு சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். அவரின் மொத்த குடும்பத்தின் பிறப்பு சான்றிதழையும் அவர் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டும்தான் அவர் மக்களிடம் பிறப்பு சான்றிதழை கேட்க முடியும்.

மோடி மக்கள்

மோடி மக்கள்

அப்போது மட்டும்தான் பிரதமர் மோடிக்கு மக்களிடம் குடியுரிமையை நிரூபிக்க கேட்கும் உரிமை மோடிக்கு இருக்கும். மோடி முதலில் அதை செய்யட்டும். இந்த சிஏஏ சட்டம் முழுக்க முழுக்க முட்டாள் தனமானது. இந்திய ஒற்றுமைக்கு இது எதிரானது.

அரசு பேச முடியவில்லை

அரசு பேச முடியவில்லை

இந்த அரசுக்கு பேச தெரியவில்லை. அதனால் மக்கள் பேசுவது இந்த அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அவர்களால் ஒரு சிறிய கேள்வியை கூட எதிர்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு சரியான திட்டமில்லை. அதனால் அவர்கள் கேள்வி கேளும் மக்களை பார்த்து பயப்படுகிறார்கள் என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.

English summary
CAA Protest: Anurag Kashyap asks PM Narendra Modi and his father’s birth certificate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X