டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீங்க அரசியல்வாதி இல்லை.. உங்க வேலையை மட்டும் பாருங்க.. ராணுவ தளபதிக்கு ப.சிதம்பரம் பதிலடி!

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் ஒழுங்காக அவரின் வேலையை மட்டும் பார்க்க வேண்டும், அரசியல் பேச கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் ஒழுங்காக அவரின் வேலையை மட்டும் பார்க்க வேண்டும், அரசியல் பேச கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த குடி உரிமை சட்ட திருத்த போராட்டம் குறித்து இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்து தெரிவித்தார். அதில், இந்த போராட்டத்தில் வன்முறை நடக்கிறது. மக்களை தவறான திசைக்கு கொண்டு செல்லும் நபர்கள் தலைவர்கள் கிடையாது.

மக்களை வன்முறையை நோக்கி நகர்த்தி செல்வது தலைவர்களுக்கு உகந்தது கிடையாது என்று பிபின் ராவத் குறிப்பிட்டார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பேச்சு குறித்து தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

என்ஆர்சி குறித்து சோனியா ஏன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை? கேட்கிறார் பிரசாந்த் கிஷோர் என்ஆர்சி குறித்து சோனியா ஏன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை? கேட்கிறார் பிரசாந்த் கிஷோர்

பேச்சு

பேச்சு

கேரளாவில் காங்கிரஸ் சார்பாக நடந்த குடியுரிமை சட்ட திருத்த யசோதா எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய ப. சிதம்பரம், போலீஸ் அதிகாரிகள், டிஜிபி மற்றும் ராணுவ தளபதி போன்றவர்கள் அரசுக்கு ஆதரவாக பேச கூடாது. ஆனால் அவர்களை அரசுக்கு ஆதரவாக பேச வைத்து இருக்கிறார்கள். அவமானமாக இருக்கிறது.

மோசம்

மோசம்

இந்தியா மிக மோசமான நிலைக்கு சென்று விட்டதை இது காட்டுகிறது. ராணுவ தளபதி பிபின் ராவத் அப்படி பேசியது தவறு. அவர் ராணுவ படையின் தளபதி. அரசியல் கட்சியை சேர்ந்தவர் இல்லை. அவர் அவரின் வேலையை ஒழுங்காக பார்க்க வேண்டும்.

மிக தவறு

மிக தவறு

அரசியல்வாதி போல பேசுவது அவர்களின் வேலை கிடையாது. நாங்கள் எப்படி போர் செய்ய வேண்டும் என்று சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வாரா. அது எங்கள் வேலை இல்லை. அப்படிதான் இதுவும் உங்கள் வேலை இல்லை.

உங்கள் வேலையை பாருங்க

உங்கள் வேலையை பாருங்க

நாடு முழுக்க இந்த போராட்டத்தால் பல்லாயிரம் மக்கள் காயம் அடைந்துள்ளனர். போலீஸ் மக்களை தாக்கி இருக்கிறது. இந்த கொடுமையான சட்டத்தை நீக்கும் வரையில் எங்கள் போராட்டம் நிற்காது. அவர்களுக்கு பெரும்பான்மை இருந்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது நடக்காது, என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Mind you own business advice P Chidambaram to Indian army General after his comment on CAA Protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X