டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள்- எதிர்ப்பாளர்கள் இடையே பயங்கர மோதல்.. பெரும் கலவரம்.. நீடிக்கும் பதற்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் போலீஸ்காரர் ரத்தன்லால் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Recommended Video

    Clashes broke out in Delhi as pro and anti CAA protesters

    டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் அமைதியாக நடைபெற்று வருகின்றன. 2 மாதங்களுக்கு முன்னர் அஸ்ஸாமில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.

     CAA Protest: One Police head constable died during clashes in Delhi

    இதேபோல் உத்தரப்பிரதேசத்திலும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் பலியாகினர். இதனை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆதரித்தும் வருகிறார். அதேநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைதியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இருப்பினும் டெல்லி மாணவர்கள், சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய போது சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையும் மீறி டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்றது.

    Pro and anti-CAA protesters clash in Delhi

    இதனிடையே இந்த வன்முறையில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் ரத்தன்லால் என்ற போலீஸ்காரர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரத்தன்லால் உயிரிழந்தார். இதேபோல் இளைஞர் ஒருவரும் போராட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்

    இதில் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. மேலும் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அனைத்து தரப்பும் அமைதி காக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Pro and anti-CAA protesters clash in Delhi

    மேலும் இந்த வன்முறைகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

    போலீஸ்காரர் பலி

    இதனிடையே இந்த வன்முறையில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் ரத்தன்லால் என்ற போலீஸ்காரர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரத்தன்லால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Clashes broke out in Delhi as pro and anti-Citizenship Amendment Act protesters pelted stones at each other on Monday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X