டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் வன்முறை.. பற்றி எரிகிறது தலைநகர்

Google Oneindia Tamil News

டெல்லி: அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்கம், தலைநகர் டெல்லியிலும் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் ஏற்படும் வன்முறைச் சம்பவங்களால் அந்த இடங்கள் பற்றி எரியும் நிலையில் உள்ளன.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்து, கிறிஸ்துவர், பார்ஸி, சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜோரோஸ்டியர்கள் ஆகிய 6 பிரிவினருக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இதில் முஸ்லீம்களின் பெயர் இடம்பெறாததால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

ஊரடங்கு உத்தரவு

இதனால் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குவாஹாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சாலைகளில் குறைந்த அளவிலான வாகனங்களே இயக்கப்படுகின்றன.

ஒரு வாரம் போராட்டம் இல்லை

இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் கூட்டமைப்பு, குடியுரிமை சட்ட மசோதா குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதால் ஒரு வாரத்திற்கு போராட்டம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி போராட்டம்

அமைதி போராட்டம்

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள பல முஸ்லீம் அமைப்புகள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. கொல்கத்தா, ஆரம்பாக், மேற்கு மிட்னாபூர், வடக்கு 24 பர்கானாக்கள், தெற்கு 24 பர்கானாக்கள் உள்ளிட்ட பகுதிகளில் அமைதி போராட்டம் நடைபெற்று வருகிறது.

கல்வீச்சு

கல்வீச்சு

எனினும் ஹவுரா மற்றும் முர்ஷிதாபாத் பகுதிகளில் வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத்தில் உள்ள காவல் நிலையத்தின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். அது போல் உலுபேரியா ரயில்நிலையத்தில் ஓடும் ரயில்கள் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

டெல்லியில் போராட்டம்

டெல்லியில் போராட்டம்

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி ஆய்வு நடத்தினார். அனைவரும் அமைதி காக்குமாறு மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தான்கர் கேட்டுக் கொண்டுள்ளார். அது போல் தலைநகர் டெல்லியிலும் போராட்டம் வெடித்தது.

 50 மாணவர்கள் கைது

50 மாணவர்கள் கைது

ஜாமீயா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை வீச்சு, தடுப்புகள் மீது தாக்குதல் உள்ளிட்டவை நடைபெற்றதால் இந்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. இதில் டெல்லி காவலர்கள் 3 பேர் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

English summary
CAB strirs Bengal burns and Delhi violence ends in lathicharge as students protest against Citizenship bill passed in both the houses of the Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X