டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ. 48ஆயிரம் கோடியில் இந்திய ராணுவத்துக்கு 83 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய ராணுவத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர ரூ. 1,202 கோடி மதிப்பில் ராணுவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் என ரூ.48,696 கோடி மதிப்பிலான ராணுவ திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சி.சி.எஸ். எனப்படும் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இந்திய ராணுவத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பிலான 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Cabinet Committee approves 83 Tejas deal worth Rs 48,000 crore

இதன்படி பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து புதிய தேஜஸ் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன. தேஜஸ் எம்.கே-1 ஏ லைட் காம்பாட் விமானம் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் நான்காவது தலைமுறை போர் விமானம் ஆகும்.

Cabinet Committee approves 83 Tejas deal worth Rs 48,000 crore

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அமைச்சரவை, ஐ.ஏ.எஃப் இன் உள்நாட்டு போர் விமானமான எல்.சி.ஏ-தேஜாஸ் கடற்படையை வலுப்படுத்த சுமார் 48000 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

Cabinet Committee approves 83 Tejas deal worth Rs 48,000 crore

இந்த ஒப்பந்தம் இந்திய பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கைக்கு ஒரு முக்கிய திருப்பமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Cabinet Committee approves 83 Tejas deal worth Rs 48,000 crore

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் சுயசார்பு பெறும் வகையில் இந்திய விமானப்படைக்காக ரூ. 45 ஆயிரத்து 696 கோடி மதிப்பில் நான்காம் தலைமுறைக்கான 73 தேஜஸ் எம்.கே.1 ஏ ரக இலகு ரக போர்விமானங்கள் மற்றும் 10 தேஜாஸ் எம்.கே.1 ரக போர் விமானங்கள் என 83 நவீன போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று

இதுதவிர ரூ. 1,202 கோடி மதிப்பில் ராணுவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் என ரூ.48,696 கோடி மதிப்பிலான ராணுவ திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

English summary
The Union Cabinet has approved the purchase of 83 Tejas fighter jets for the Indian Army at a cost of Rs 48,000 crore. In addition, Rs. The Union Cabinet has approved Rs 48,696 crore worth of military projects worth Rs 1,202 crore to upgrade military infrastructure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X