டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரப்போகும் டிரம்ப்.. அமெரிக்காவிடம் ரூ.240 கோடிக்கு ரோமியோ ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வருவதற்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) இந்திய கடற்படைக்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 24 கடற்படை ஹெலிகாப்டர்களை வாங்க 2.4 பில்லியன் டாலர் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

லாக்ஹீட் மார்ட்டின் உருவாக்கிய எம்.எச் -60 ரோமியோ என்ற ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் பிப்ரவரி 25 ம் தேதி பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்திடப்படலாம் என்கிறார்கள்.

Cabinet Committee on Security Approves $2.4 Billion Naval Helicopter Deal With US

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டு வெளிநாட்டு இராணுவ விற்பனை பாதை வழியாக நடத்தப்படுகிறது, இது அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கான ஒப்பந்தத்தின் அமெரிக்க பதிப்பாகும். தனது 36 மணி நேர இந்தியா பயணத்தின் போது எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட மாட்டாது என்று டிரம்ப் தெளிவுபடுத்திய நிலையில், ரோமியோ விமான ஒப்பந்தம் மட்டும் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளது.

1.86 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவிலிருந்து ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவது குறித்தும் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை குழு முடிவு செய்துள்து. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு இன்னமும் இறுதி ஒப்புதல் வழங்கவில்லை.

அதிபர் டிரம்பின் வருகைக்கு முன்னதாக, இந்தியாவுக்கு ஒரு ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு (ஐஏடபிள்யூஎஸ்) விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.

Recommended Video

    The Beast: Donald Trump car specifications | இந்தியா வரும் டிரம்ப் காரில் என்ன வசதிகள் இருக்கும் ? dsv

    எதிரி நாட்டு நீர் முழ்கி கப்பல்களை அழிப்பதற்கும், கடற்படை கொள்ளையர்களை அழிப்பதற்கும் எம்ஹெச்-60 என்ற இந்த ரோமியா கடற்படை ஹெலிகாப்டர் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள்.

    English summary
    Six days before President Donald Trump lands in India, Cabinet Committee on Security Approves $2.4 Billion Naval Helicopter Deal With US
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X